அண்மைய செய்திகள்

recent
-

கனடாவிலும் பிரித்தானியாவிலும் உலகளாவிய தமிழர் மரபு பெருவிழா,,,


உலகளாவிய தமிழர் மரபுத் திங்கள் பெருவிழாவின் நிகழ்வரங்குகளின் வரிசையில் பிரித்தானியாவில் தைத்திருநாள் நிகழ்வினை முன்னெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கனடாவில் நாட்டார் இசைமாலையுடன் கூடிய கருத்தரங்கொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
பிரித்தானியாவில் கடந்த 16.01.2016 அன்று குறைடன் பகுதியில் பொதுப் பொங்கலிடல், அரங்காற்றுகை என தைத்திருநாளினை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு தமிழர் கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக வைத்தியக் கலாநிதி கந்தப்பு ஜெயந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ஈழத்து கவிஞர் க.சிவசுப்பிரமணியன், Mr.Gavin Bawel (central croydon Member of parliament ), Clr.Mike Selvanayagam (Croydon broad green councillor ), Mr.k.balakirushnan (economic consultant Tamil Eelam ), Mr.Anbananthan Sooban (solicitor ) ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

பொதுச்சுடரினை திரு.செல்வநாதன் அவர்கள் ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து பிரித்தானிய தேசியக்கொடியினை Clr. Mike selvanayagam அவர்களும் தமிழீழ தேசியக் கொடியினை திரு.க.பாலகிருஷ்ணன் அவர்களும் ஏற்றி வைத்திருந்தனர். வரவேற்புரையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் வழங்கியிருந்தார்.

சிலம்பம் நர்த்தணாலயம் நடணக்கல்லூரி ஆசிரியை வாணி சுதன் அவர்களின் மாணவிகளும், சிவகுமார் தமிழ் பாடசாலை ஆசிரியர் துஷ்யந்தி அவர்களின் மாணவிகளும், தெய்வாலயம் தமிழ் பாடாசாலை ஆசிரியர் வதனி கரன் அவர்களின் மாணவிகளும், நடராஜா நர்த்தனாலயம் மதிவதனி பிரபாகரன் அவர்களின் மாணவிகளும் கலை நிகழ்ச்சிகளை வழங்கியிருக்க, செல்வி ஷாமினி இராஜநாதன் அவர்கள் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்.

நிறைவுரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் மக்கள் விவகாரங்களுக்கான பிரித்தானிய செயலர் திரு நீதிராஜா அவர்கள் நிகழ்த்தினார்.

இதேவேளை தமிழர் மரபுப் பெருவிழாவின் வரிசசையில் கனடாவில் இசைமாலையுடன் கூடிய கருத்தரங்கொன்று வரும் பெப்ரவரி 6ம் நாள் சனிக்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழர்களின் பண்டைய காலப் புலம்பெயர்வு முதல் இற்றை வரையிலான புலம்பெயர்வு தொடர்பிலான ஆய்வரங்கினை, முனைவர் செல்வநாயகி சிறிதாஸ், கவிநாயகர் கந்தவனம், கவிஞர் பொன்னையா விவேகானந்தன் ஆகியோர் வழங்குகின்றனர்.

பண்ணும் தமிழரின் பண்பட்ட வாழ்வினை எடுத்தியம்பும் மரபுக்கலைவேந்தன் பொன் அருந்தவநாதன், சிந்துநடைச்செல்வி பூங்கொடி அருந்தவநாதன் குழுவினர் வழங்கும் நாட்டார் இசை மாலையும் இடம்பெறவுள்ளது.

ரொரண்ரோவின் பெரியசிவன் கோவில் மண்டபத்தில் (1148Bellamy Road, Toronto ON) மாலை 5 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறுகின்றது.







கனடாவிலும் பிரித்தானியாவிலும் உலகளாவிய தமிழர் மரபு பெருவிழா,,, Reviewed by Author on January 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.