வரலாற்றில் முதல் தடவையாக கதிரவெளி பாடசாலை மாணவன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு...


மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட கதிரவெளி விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இருந்து வரலாற்றில் முதல் தடவையாக ஒரு மாணவன் பல்கலைகழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையில் உயர்தரம் ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்து இவ்வருடம் முதல் தடவையாக கலைப்பிரிவில் தியாகராஜா ஜீகரன் என்ற மாணவன் மூன்று பாடங்களிலும் (புவியியல், இந்துநாகரீகம், அரச அறிவியல்) ஏ பெறுபேற்றை பெற்று பல்ககலைக்கழக தகுதி பெற்றுள்ளார்.
குறித்த பாடசாலையில் இருந்து இம்முறை 24 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
வரலாற்றில் முதல் தடவையாக கதிரவெளி பாடசாலை மாணவன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு...
Reviewed by Author
on
January 04, 2016
Rating:
Reviewed by Author
on
January 04, 2016
Rating:

No comments:
Post a Comment