அண்மைய செய்திகள்

recent
-

உயிரியல் பிரிவில் சாதனை படைத்தார் ராஜிதா!


இனிவருகின்ற காலங்களில் எமது பிரதேசத்து மாணவர்கள் விஞ்ஞான, கணிதப் பிரிவுகளை தெரிவு செய்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி எமது பிரதேசத்துக்கு பெருமை தேடித் தரவேண்டும் எனக் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள, நாகேந்திரம் ராஜிதா தெரிவித்துள்ளார்.

வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேற்றின் படி, கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட மட்/ககு/பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் பரீட்சை பெறுபேற்றில் பாரியளவான முன்னேற்றத்தை அவதானிக்க முடிகின்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் முதன் முறையாக க.பொ.த. உயர்தர உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தோற்றிய செல்வி. நாகேந்திரம் ராஜிதா எனும் மாணவி A,2B எனும் பெறுபேறுகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 25ஆவது நிலையில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளார்.

இது தொடர்பாக கருத்துரைத்த மாணவி,

பாடசாலையில் உயர்தரப்பிரிவில் உயிரியல் பிரிவு ஆரம்பித்து பரீட்சைக்குத் தோற்றிய முதல் முறையிலேயே பல்கலைக்கழகத்துக்கு தெரிவானமையினையிட்டு பெருமையடைகின்றேன்.

இதற்கு காரணமான என்பெற்றோருக்கும் பாடசாலை அதிபரான திரு.த.சந்திரலிங்கம் அவர்களுக்கும் நன்றியினைக் கூறிக்கொள்கின்றேன். அத்தோடு தனக்கு பாடசாலையில் கற்பித்த
ஆசிரியர்களான சிவபதி, சிவகுமார், சர்மிலா, மயூரன் ஆகியோருக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, மேலதிக வகுப்புக்களில் கற்பித்த பிரகலாதன், கஜேந்தினி ஆசிரியை ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

இனிவருகின்ற காலங்களில் எமது பிரதேசத்து மாணவர்கள் விஞ்ஞான, கணிதப் பிரிவுகளை தெரிவு செய்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி எமது பிரதேசத்துக்கு பெருமை தேடித் தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்” என அவர் தெரிவித்தார்.

உயிரியல் பிரிவில் சாதனை படைத்தார் ராஜிதா! Reviewed by Author on January 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.