அண்மைய செய்திகள்

recent
-

உ/த பரீட்சையில் இரண்டு பிரிவுகளில் யாழ்.மாவட்டம்! ஒரு பிரிவில் மட்டு மாவட்டம் சாதனை






கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டு துறைகளில் யாழ்ப்பாண மாணவர்கள் இருவர் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுள்ள, அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டம் ஒரு பிரிவிலும் சாதித்துள்ளது.
புனித ஜோன்ஸ் கல்லூரியின் மாணவர் கருணைநாயகம் ரவிகரன் விஞ்ஞான தொழில்நுட்ப பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் பாலசுப்பிரமணியம் ஞானகீதன் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

இரண்டாம் இணைப்பு

உயர்தரப் பரீட்சை முடிவு! யாழ்.மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரம் வெளியாகியுள்ளன

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் மாவட்ட மட்டத்தில், உயிரியல் கணிதப்பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது.

இதேவேளை, உயிரியல் பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 24ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.



கணிதப்பிரிவில் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் கலாமணி மதனாகரன் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 22ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

வர்த்தக பிரிவில் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் மாணிக்கவாசகர் லஜீபன் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 62 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

கலைப்பிரிவில் அச்சுவேலி இடைக்காடு மகாவித்தியாலய மாணவி குணபாலசிங்கம் நிதர்சனா 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 46ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

கபொத உயர்தரப்பரீட்சை முடிவுகள் வெளியீடு - தமிழ் பேசும் மாணவர்கள் முன்னணியில்
உயர்தரப்பரீட்சை!- கலைப்பிரிவில் குருநாகல் மாணவி முதலிடம்! வர்த்தகப் பிரிவில் குருநாகல் மாணவனுக்கு முதலிடம்
க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மாணவி முதலிடம்!
முல்லைத்தீவில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி கணிதப்பிரிவில் முதலிடம்
கிளிநொச்சி இந்துக் கல்லூரி விஞ்ஞான பிரிவில் முதலிடம்

இதேவேளை, தற்பொழுது யாழ்ப்பாண மாவட்ட  பரீட்சை முடிவுகளின்படி, தெல்லிப்பளை மகாஐனாக் கல்லூரி கணிதம் ஒருவர் வர்த்தகத்துறை இருவர் மற்றும் கலைத்துறையிலும் ஒருவர் என்ற அடிப்படையில் மூன்று எ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

இன்று வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறு பேறுகளின் அடிப்படையில் மகாஐனாக் கல்லூரியில் பெறப்பட்ட பெறு பேறுகளின் விபரம் வருமாறு.

கணித பிரிவு
1. ராஜேந்திரன் ஜெனார்த்தனன் - 3A 
2. ஜெயசந்திரன் மயூரன் - 2A, B
3. மேதுஷா துரைசிங்கம் - 3B
4. விஷ்ணுகா கிருபாகரரன் -2C,S

உயிரியல் பிரிவு
1. பத்மனாதன் கௌதமன் - 2C,S
2. கிரிசா ஆறுமுகசாமி - 2C,S
3. தரண்யா சட்டநாதன் - 2C,S
4. மோனராஜி சத்தீஸ்வரன் - 2C,S

வர்த்தகப் பிரிவு
1. விதுஷா வாசுதேவன் - 3A
2. ஜெயபாலன் சுதாகரன் - 3A
3. ராசா சண்ராஜ் 2A, B
4. பாலசுப்பிரமணியம் தனுசாந் 2A,B
5. சஷானா சுதாகரன் 2A,B
6. மோகனபிரபு பவன் A,B,C
7. மாதங்கி தனபாலசிங்கம் A,B,C

கலைப்பிரிவு
1. சஜிதா லோகநாதன் -3A
2. லோஜினி மகாராசா -2A,B
3. ஜெசிந்தா சௌந்தரராஜன் -2A,B
4. சுஜேனி கந்தசாமி -2A,B
5. கணேஷ் டிபர்சன்; -2A,B
6. செல்வராசா கதீஷ் -2A,B
7. சிவகாயத்தீரிநாயகி கனகசூரியர் A, 2B
8. ஹம்சினி ஞானமனி 3B
9. சிவரஞ்சினி நவநீதகிருஷ்ணன் A,B,C
10. லக்‌ஷனா பகிரதன் 2A,C
11. திவ்யா சக்திவடிவேல் - 2A,C
12. ஜெனா ஜீவாகரன் A,B,C
13. கஜவிழி கனகராசா -A,B,C
14. சிவபிரகாசம் நிருஷாந் 2A,S
15. நிரோஜினி கந்தசாமி - A,B,C
16. ஶ்ரீகாந்தா தாரரங்கன் B,C

உ/த பரீட்சையில் இரண்டு பிரிவுகளில் யாழ்.மாவட்டம்! ஒரு பிரிவில் மட்டு மாவட்டம் சாதனை Reviewed by Author on January 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.