தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்கள் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு-(படம்)
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை(4) இரவு 9 மணியளவில் கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை(5) மதியம் மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரம் மற்றும் தனுஸ்கோடி ஆகிய இடங்களைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை இரவு இரண்டு படகுகளில் கடற்தொழிலுக்குச் சென்ற நிலையில்,இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது குறித்த 8 இந்திய மீனவர்களையும் கடல் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரனைகளின் பின் குறித்த 8 இந்திய மீனவர்களையும் இன்று செவ்வாய்க்கிழமை(5) மதியம் மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் குறித்த மீனவர்கள் மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
குறித்த இந்திய மீனவர்களை இந்திய துனைத்தூதரக அதிகாரி வருகை தந்து பார்வையிட்டார்.
மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளின் விசாரனைகளின் பின் குறித்த மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் என்.மெராண்டா தெரிவித்தார்.
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்கள் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு-(படம்)
Reviewed by NEWMANNAR
on
January 05, 2016
Rating:

No comments:
Post a Comment