இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம்! பணிகளை ஆரம்பித்தது நிபுணர் குழு
வடகிழக்கு தமிழர்களின் நீண்டகால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் மக்கள் அவை உருவாக்கிய அரசியல் தீர்வு திட்டத்தை தயாரிப்பதற்கான நிபுணர்குழு இன்றைய தினம் உத்தியோகபூர்வமான தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.
நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் பேராலயங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் பணிகளைத் தொடங்கியுள்ளன.
தமிழ் மக்கள் அவை மிகுந்த விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் கடந்த வருடம் டிசம்பர் 27ம் திகதி 2ம் அமர்வினை நடத்தியிருந்தது.
இதில் தமிழ் மக்களுடைய தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வினைக் காண்பதற்கான 14 நிபுணர்கள் அடங்கிய நிபுணர்குழு உருவாக்கப்பட்டிருந்தது.
இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளினதும், வடமாகாண முதலமைச்சரினரும் 2 பிரதிநிதிகள் உள்ளடங்கிய 14 நி புணர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த நிபுணர்குழு இன்றைய தினம் யாழ்.மாவட்டத்திலிருந்து தமது உத்தியோகபூர்வ பணிகளை தொடங்கியிருக்கின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு நல்லூர் ஆலயத்தில், வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், யாழ்ப்பாணம் பேராலயத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றன.
இதனை தொடர்ந்து தமது பணிகளை நிபுணர்குழு உத்தியோகபூர்வமாக இன்றையதினம் தொடங்கியிருக்கின்றது.
உத்தியோகபூர்வமாக பணிகள் தொடங்கும் நிகழ்வில் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தலைவர், மற்றும் புளொட் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் மக்கள் அவை பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிபுணர்குழு யாழ்.மாவட்டத்திலிருந்து வடகிழக்கு மாகாணங்களில் தமது பணிகளை மக்கள் மட்டத்திலிருந்து கருத்தறிந்து தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை தயாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம்! பணிகளை ஆரம்பித்தது நிபுணர் குழு
Reviewed by Author
on
January 02, 2016
Rating:
Reviewed by Author
on
January 02, 2016
Rating:


No comments:
Post a Comment