வடக்கில் மரக்கறி விலை பாரியளவில் அதிகரிப்பு...
வட மாகாணத்தில் மரக்கறி விலை அதிகரித்துள்ளதாக வவுனியா மாவட்ட மரக்கறி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு மற்றும் வடக்கில் மரக்கறி செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகிய காரணங்களினால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த இரண்டு மாதங்களாக வட மாகாணத்தில் பெய்த தொடர் மழையினால் மரக்கறி செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, கிளிநொச்சி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளே அதிகளவில் மழையினால் பாதிக்கப்பட்டிருந்தன.
வட மாகாணத்தில் பச்சை மிளகாயின் விலை 1500 முதல் 1600 ரூபா வரை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரக்கறி விலை விபரங்கள்
மரக்கறி (1கிலோகிராம்) மொத்த விலை சில்லரை விலை
பச்சை மிளகாய் 1300-1400 1500-1600
கறி மிளகாய் 750-800 900-1000
பொஞ்ஜி 450-550 600-700
கத்தரிகாய் 250-300 350-400
வெண்டிக்காய் 350-400 450-500
கரட் 300-350 380-400
வட்டக்காய் 250-300 350-380
வடக்கில் மரக்கறி விலை பாரியளவில் அதிகரிப்பு...
Reviewed by Author
on
January 02, 2016
Rating:
Reviewed by Author
on
January 02, 2016
Rating:

No comments:
Post a Comment