நாகையில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட சீன காதல் ஜோடி...
தமிழகத்தில் சீன காதல் ஜோடி இந்து முறைப்படி செய்து கொண்ட திருமணத்தில் சீனர்களும் தமிழர்களும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.
சீனாவை சேர்ந்த கோங் ஜோங் என்ற நபரும் ஆன்யா யூ என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில், இருவருக்குமே தங்களது திருமணத்தை இந்து முறைப்படி இந்தியாவில் நடத்த வேண்டுமென்ற ஆசை இருந்துள்ளது.
இதையடுத்து, அவர்கள் நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள தென்னலங்குடியில் வசிக்கும் நண்பர்களிடம் தங்களது ஆசையை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே, தென்னலங்குடியில் இந்து முறைப்படி திருமணம் செய்து வைக்க திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது.
இவர்களின் திருமணத்திற்காக சீனாவில் இருந்து மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் தென்னலக்குடிக்கு வந்துள்ளனர்.
மேலும், இந்த திருமணத்தை காண தென்னலக்குடியை சேர்ந்த பொதுமக்களும் வந்துள்ளனர்.
இதையடுத்து மணமகன் கோங் ஜோங் பட்டு வேட்டி அணிந்தும், மணப்பெண ஆன்யா யூ பட்டு சேலை அணிந்து வந்துள்ளனர்.
பின்னர், இந்து பாரம்பர்யப்படி, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மங்கள வாத்தியங்கள் முழங்க அவர்களுக்கு தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரும் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நாகையில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட சீன காதல் ஜோடி...
Reviewed by Author
on
January 06, 2016
Rating:
Reviewed by Author
on
January 06, 2016
Rating:


No comments:
Post a Comment