வடமாகாண பிரதம செயலாளருக்கு மன்னாரில் இருந்து பகிரங்க மடல்

ஜயா,,,,,,,,,,,,,,,
கடந்த காலங்களிலே வடமாகாண முதலைமச்சர், வடமாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் என பலருக்கு பல தடவைகள் மக்கள் சார்பான பல முறைப்பாடுகளை தெரியப்படுத்தியிருந்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமையினால் வடமாகாண நிர்வாகங்களுக்கு பொறுப்பானவர் என்ற ரீதியிலும் நேர்மையாக செயற்படும் மனிதர் என்ற ரீதியிலும் மக்கள் நாளாந்தம் எதிர் நோக்கும் பிரச்சினைகளை தங்கள் முன் வைக்கின்றோம். இவைகளை தீர்க்க தாங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்றும் நம்புகின்றோம்.
01.மன்னார் மாவட்டத்திலே உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் பார்க்க காணி விடயங்களில் ஊழலும் லஞ்சமும் நிறைந்து காணப்படுவது மன்னார் பிரதேச செயலகத்தில் தான். பிரதேச செயலாளரும் காணி குடியேற்ற அலுவலகரும் இணைந்து பெரும் தொகை பணத்தை வாங்கிங் கொண்டு தனியாருக்கும் காணி வழங்க தேவையற்றவர்களுக்கும் காணியை வழங்கி வருகின்றனர்.
இதற்கு காரணம் மாகாண காணி உத்தியோகத்தரான திரு.வசந்தன் என்பவரே இவருக்கு ஏற்கனவே இடமாற்றம் வழங்கி இருந்தும் அந்த இடமாற்றம் மாகாண சபை அரசியல் வாதிகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக முதலமைச்சர் அவர்களுக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அவ்விடயம் தொடர்பாகவும் அவரின் நடவடிக்கை தொடர்பாகவும் பரிசீலணை செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
02.மன்னாரில் உள்ள உள்ளுராட்சி சபைகளிலே சர்வாதிகாரமும் ஊழலும் நிறைந்து காணப்படுவது மன்னார் நகர சபையிலே ஏற்கனவே மக்களால் தெரிவு செய்யப்பட்ட தழிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்ந உறுப்பினர்களையும் தலைவரையும் பகடகாய்களாக பயன்படுத்தி வந்த நகரசபை செயலாளர் தற்போது தன்னிச்சையாக தான் விரும்பியவாறு அபிவிருத்தி வேலைகள் என்ற பெயரில் பணம் சுருட்டும் வேலையில் ஈடுபட்டு வருகின்றார். இதற்கு உடந்தையாக நகரசபை உத்தியோகத்தர்கள் சிலரையும் பயன்படுத்தி வருகின்றார்.
மன்னார் நகரசபையால் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி வேலைகளும் அங்கு கடமையாற்றும் ஒரு தொழிநுட்ப உத்தியோகத்தரை வைத்தே செய்யப்படுகின்றது. இதற்கு தாம் கோரும் கிராம அபிவிருத்திச் சங்கத்தை கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் சிபார்சு செய்து கொடுக்கின்றனர்.
தாங்களாகவே வேலை திட்டங்களை செய்ய முடியாத கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு வேலைத்திட்டங்கள் வழங்குவதையும் உப ஒப்பந்தங்கள் வழங்குவதையும் உடன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும்.
அனைத்து வேலைகளையும் கேள்வி கோரும் நடைமுறையை மேற்கொள்வதன் மூலம் தரமான மலிவாக திட்டங்களை நிறைவேற்ற முடியும்.நகரசபையில் கடமையாற்றும் அந்த தொழிநுட்ப உத்தியோகத்தர் பல்வேறு பெயர்களில் செய்த வேலை விபரம்...
01.உப்புக்குள அன்னை இல்ல வீதீ - முடிவுற்றது.
02.நகர சபைக்கு பக்கத்து வீதீ -முடிவுற்றது.
03.கொன்வன்ட் றோட் ஒழுங்கை -முடிவுற்றது.
04.நல்லாயன் வீதி -நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
05.மன்னார் பொது சேமக்காலை மதில்; - நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
06.மன்னார் தனியார் பஸ் தரிப்பிடம் -முடிவுற்றது.வேலைஒழுங்காகசெய்ய்ப்படவில்லை.
07.கொன்வன்ட் பாடசாலைபின் ஒழுங்கை -ஆரம்பிக்க இருக்கின்றது.
மன்னார் நகரச பையில் உள்ள பெரும்பாலான உத்தியோகத்தர்கள் ஒப்பந்தவேலைகளையே செய்து வருகின்றனர். நகர சபை நிர்வாகத்தினர் முன்னுரிமை கொடுக்க வேண்டிய வேலைத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை.எவரிடமும் எந்த ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளாது தன்னிச்சையாகவே செயற்பட்டுவருகின்றனர். இந்த ஒரு நகரசபையிலே மட்டும் தான் எல்லோரும் எல்லாவேலைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது ஒரு சிறு பிரதேசமான மன்னார்; நகரப்பகுதியில் ஒழுங்கான கால்வாய்களையும், கல்வெட்டுக்களையும், வீதிகளையும் புனரமைக்கமுடியவில்லை யென்றால் அது அந்தந்த திணைக்கள உத்தியோத்தர்களையேசாரும்.
இவ்விடயத்தில் தாங்கள் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் போது அதன் தேவையையும் பயன்பாட்டையும் பரிசீலித்து அனுமதி வழங்குமாறுகேட்டுக் கொள்கின்றோம். உதாரணமாக மன்னார் பொது விளையாட்டரங்கு விளையாட்டுவீரர்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கிகிடக்கின்றது.
வீதிகள்,கால்வாய்கள்,கல்வெட்டுக்கள், தெருவிளக்குகள் பொருத்துதல் என பல்வேறு அவசிய தேவைகள் இருக்கும் போது இலாப நோக்கத்திற்காக மன்னார் சேமக்காலைக்கு பின் மதில் கட்டப்படுகின்றது இதை தாங்கள் நேரில் சென்று பார்வையிடுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
03.மன்னார் மாவட்டத்திலே ஏ32 வீதியையும், ஏ14 வீதி தள்ளாடிவரை இவை இரண்டையும் தவிர வேறு எந்த வீதி ஒழுங்காக புனரமைக்கப்பட்டுள்ளது. முhகாண சபைக்குரிய வீதி அபிவிருத்தி திணைக்களமும், மத்திக்குரிய வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் வெறுமனே கண்துடைப்பு வேலைகளையே செய்து வருகின்றது. மன்னார் வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவுவண்டி செல்லும் மிகமுக்கிய வீதியான வைத்தியசாலை தொடக்கம் பெரிய கடைவரையான வீதி மிகவும் பழுதடைந்து போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் உள்ளது.
இவ் வீதியால் கொண்டு செல்லப்படும் நோயாளர் சொல்லனா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாது உள்ளதுடன் இவ்வீதி பராமரிப்பு என்ற பெயரில் பணம் எடுக்கப்படுவதாக அறிகின்றோம். எமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் விழலுக்கிறைத்த நீராகிவிட்டனர்.
மன்னாரில் அனைத்து வீதிகளும் புனரமைக்கப்பட வேண்டும் இதற்குமாகாண அரசியல் வாதிகளுக்கப்பால் மக்கள் முன்னுரிமைப்படுத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய சூழ் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் ஒவ்வொரு வருடமும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் ஒதுக்கப்படும் நிதி சரியாhக மக்களை சென்றடையவில்லை. அதில் திணைக்களங்களுடன் இணைந்து மாகாண சபை உறுப்பினர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒதுக்கப்படும் பொருட்கள் பெற்றுக்கொண்டதாக கையெழுத்துக்கள் பெறப்படுகின்றது. ஆனால் பொருட்கள் வழங்கப்படவில்லை இவற்றை கடந்த வருடத்தில் இருந்து மீளாய்வு செய்யும் பட்சத்தில் அறிந்து கொள்ளமுடியும்.
தாங்கள் இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என்று நம்புகின்றோம். தூங்கள் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மேலதிகமான இலஞ்ச ஊழல்களையும் அரச அதிகாரிகளின் தவறான செயற்பாட்டினையும் தெரியப்படுத்த தயாராக உள்ளோம்.
-மன்னாரான்-

Reviewed by NEWMANNAR
on
January 01, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 01, 2016
Rating:

No comments:
Post a Comment