அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் அரசியல் கட்சிகளினதும்,அமைப்புக்களினதும் தலைவர்களே பிறக்கின்ற புது வருடத்திலாவது ஒன்று படுங்கள்-முன்னாள் எம்.பி எஸ்.வினோ

ஜனநாயக அரசியல் மாற்றத்தினூடாக சிங்கள தேசத்துக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்து விட்டு எமது தேசம் இன்று  விடுதலைக்கு ஏங்கிக் கொண்டிருக்கின்றது. மாற்றம் என்ற பயிருக்கு உரமிட்டு உழைத்து விட்டு யாரோ அறுவடை செய்ய எமது இனம் ஏமாந்து போய் நிற்கின்றது.

அத்தோடில்லாமல் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பெரிய பெரிய தூண்டில்களோடு காத்திருக்கிறது பேரினவாதம்.

அதற்கு தீனி போட எமது தலைவர்கள் அணி பிரிந்து போட்டி போடும் பரிதாபத்தை யாரிடம் முறையிட. தமிழினத்துக்கு தலைமை தாங்கும்  தகுதியை இழந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் வாழும் எம தினத்துக்கு உறுதியான, கரை சேர்க்கக்கூடிய துடுப்புக்களை தேர்வு செய்வதில் குளப்பத்தை கொண்டு வருகிறார்கள்.

எமக்கான வெற்றிகளையும்,உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க எமது தலைவர்களுக்கு மனவலிமையையும், உறுதியையும்,ஒன்று பட்டு நிற்கும் ஆற்றலையும் இறைவன் இந்தப் புதிய ஆண்டில் வழங்கப் பிரார்த்திப்போம்.

எமது மக்களை அரசியல்  அநாதைகள் ஆக்காமல் எமது தலைவர்கள்  எனக்கூறிக்கொள்வோர் ஒன்று பட்டு நிற்கவும்,உண்மையாகவும்,நேர்மையாகவும், இதய சுத்தியுடன் உழைக்கவும் கோரும் ஆண்டாக இவ்வாண்டினை வரவேற்போம்.

'தமிழ் அரசியல் கட்சிகளினதும்,அமைப்புக்களினதும்  தலைவர்களே!

ஒன்று  படுங்கள். பேதங்களையும்,வேற்றுமைகளையும் களைந்திடுங்கள். ஒன்றாக அமர்ந்து  பேசுங்கள். நாங்கள் ஒன்றாகவும்,தெளிவாகவும் இருக்கின்றோம்.

 எங்கள் அழுகைகளும்,ஏக்கங்களும் உங்கள்    காதுகளுக்கு எட்டட்டும்' என்ற எம்    தலைமைகளுக்கான சாமானிய தமிழ் மக்களின் வேண்டுதல்களுடன் புதியஆண்டை வரவேற்போம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எஸ்.வினோநோகராதலிங்கம்
முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர்
வன்னி மாவட்டம்.

தமிழ் அரசியல் கட்சிகளினதும்,அமைப்புக்களினதும் தலைவர்களே பிறக்கின்ற புது வருடத்திலாவது ஒன்று படுங்கள்-முன்னாள் எம்.பி எஸ்.வினோ Reviewed by NEWMANNAR on January 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.