அண்மைய செய்திகள்

recent
-

சட்ட விரோதமாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 4 இந்தியர்கள் கைது


குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு இந்திய பிரஜைகள் நுவரெலியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களுமே நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலா வீசாவில் வருகை தந்துள்ள குறித்த இந்திய பிரஜைகள் அலகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட சிறு பொருட்களை விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜைகளை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்ட விரோதமாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 4 இந்தியர்கள் கைது Reviewed by NEWMANNAR on February 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.