கடந்த கால வரலாறுகள் கசப்பானதாக அமைந்திருந்தது.இன்று அந்த நிலை இல்லை- கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை.
எங்களுக்கு இறைவனால் கிடைக்கப்பெற்ற மாபெரும் கொடையாக இந்த பேரூந்து நிலையம் அமைந்துள்ளது.இந்த சந்தர்ப்பத்தில் எவ்வித பேதங்களும் இன்றி நீங்கள் அனைவரும் கைகோர்த்து நிற்பது அற்புதாக உள்ளது என மன்னார் மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தெரிவித்தார்.
முருங்கன் பேரூந்து நிலைய திறப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
-இதன் போது விருந்தினர்களாக அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
-குறித்த திறப்பு விழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மன்னார் மறை மாவாட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தெரிவித்தார்.
-அவர் மேலும் உரையாற்றுகையில்,,,
-கடந்த கால வரலாறுகள் மிகவும் கசப்பானதாக அமைந்திருந்தது.ஆனால் இன்று அந்த நிலை இல்லை.ஒன்று ஒற்றுமையை உணர்ந்து ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு என்ற எமது முன்னோர் கூறியுள்ளனர்.அந்த வகையில் எல்லா சமயங்களும் ஒற்றுமையையும் அன்பையும் பன்பையும் கற்றுக்கொடுக்கின்றது.
அதே போல் நாங்கள் எவ்வித வேற்றுமையும் இன்றி ஒற்றுமையாக செயற்பட்டால் தான் இந்த அபிவிருத்திகளை எல்லாம் உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியும்.நாங்கள் பிழவு பட்டு காணப்பட்டால் அநிதியாகவும் சமூகத்திற்கு செய்யும் துரோகமாகவும் அமைந்து விடும்.
-எனவே அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.அந்த வகையில் எமது மாவட்டத்திற்கு எவ்வித வேற்றுமைகளும் இன்றி மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் எனது ஆதரவு என்றும் கிடைக்கும்.
அந்த வகையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள சந்தை தொகுதியுடன் காணப்படும் பேரூந்து நிலையம் எமது மக்களின் வாழ்க்கைத்தரத்தினை இழகு படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
அந்த வகையில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ நான் உங்களை அழைக்கின்றேன்.என மன்னார் மறை மாவாட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மேலும் தெரிவித்தார்.
கடந்த கால வரலாறுகள் கசப்பானதாக அமைந்திருந்தது.இன்று அந்த நிலை இல்லை- கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை.
Reviewed by NEWMANNAR
on
February 18, 2016
Rating:

No comments:
Post a Comment