காபனீரொட்சைட்டையும் நீரையும் நேரடியாக எரிபொருளாக மாற்றும் புரட்சிகர செயற்கிரமம்...
ஒருமுகப்படுத்தப்பட்ட ஒளி, வெப்பம் மற்றும் உயர் அழுத்தத்தின் கீழ் காபனீரொட்சைட்டையும் நீரையும் நேரடியாக ஒரே படிமுறையில் பயன்படுத்தத்தக்க ஐதரோ காபன் எரிபொருளாக மாற்றும் புரட்சிகர முயற்சியில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
தமது இந்தக் கண்டுபிடிப்பு வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட்டை எரிபொருள் உற்பத்திக்காக அகற்றுவதற்கு வழிவகை செய்வதால் சுற்றுச் சூழல் வெப்பமடைதலை தடுக்க பெரிதும் உதவும் என அவர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் மேற்படி எரிபொருள் உற்பத்தி செயற்கிரமம் வளிமண்டலத்துக்குள் ஒட்சிசன் மீளவும் சேர்க்கப்படுவதற்கு வழிவகை செய்வதால் அது சுற்றுச்சூழலுக்கு முற்றுமுழுதாக அனுகூல விளைவை ஏற்படுத்தும் ஒன்றாகவுள்ளதாக இந்த ஆய்வில் பங்கேற்ற டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரெட்றிக் மக்டொனல் தெரிவித்தார்.
180 பாகை செல்சியஸிலிருந்து 200 பாகை செல்சியஸ் வரையான வெப்பநிலையில் 6 மடங்கிற்கு அதிகமாக வளிமண்டல அமுக்கத்தில் செயற்படும் பிறப்பாக்கியொன்றில் இவ்வாறு காபனீரொட்சைட்டும் நீரும் தாக்கமுறுகையில் நேரடியாக எரிபொருள் விளைவாகக் கிடைத்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்தக் கண்டுபிடிப்பு கார்கள் உள்ளடங்கலான வாகனங்களால் வெளியிடப்படும் புகையிலுள்ள காபன் மாசுக்களால் சுற்றுச்சூழல் மாசடையும் பிரச்சினைக்கும் தீர்வாக அமைவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி விஞ்ஞானிகளின் ஆய்வானது நஷனல் அக்டமி ஒப் சயன்ஸ் விஞ்ஞான ஆய்வேட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
காபனீரொட்சைட்டையும் நீரையும் நேரடியாக எரிபொருளாக மாற்றும் புரட்சிகர செயற்கிரமம்...
Reviewed by Author
on
February 26, 2016
Rating:

No comments:
Post a Comment