விண்வெளியில் ஒலித்த இசை: நாசா வெளியிட்ட .....
விண்வெளியில் கேட்ட அபூர்வ இசை குறித்த வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த John Young மற்றும் Eugene ஆகிய இருவரும் 1969 ஆம் ஆண்டு அப்போலோ- 10 விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு பயணம் செய்து சந்திரன் குறித்து ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட விண்வெளி குழுவினர், அங்கு விண்வெளியில் வைத்து தங்களுக்குள் கலந்துரையாடிம்போது, அந்த அபூர்வஇசை ஒலித்துள்ளது.
இந்த இசை ரேடியோ கருவிகள் மூலம் பூமியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை விசில் எழுப்பும் ஒலி போன்று இருந்துள்ளது.
இவை நடந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், இதுநாள்வரை இந்த அபூர்வ இசை தொடர்பான செய்திகள் வெளியாகவில்லை.
ஆனால், தற்போது இதுதொடர்பான தகவல்களை நாசா வெளியிட்டுள்ளது.
எனினும், விண்வெளி ஆராய்ச்சிகளில் முட்டுக்கட்டை ஏற்படாத வகையில் தங்களது விண்வெளிப் பயணத்தின்போது ஆய்வாளர்கள் சந்திக்கும் விபரீதமான, விசித்திரமான அனுபவங்களை பகிரங்கமாக வெளியிட அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, 1969-ம் ஆண்டு சந்திரனில் முதன்முதலில் காலடி பதித்த அமெரிக்க விண்வெளி வீரரான நீல் ஆர்ம்ஸ்டிராங், மசூதிகளில் தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்கொலியைப் போன்ற சப்தத்தை தனது விண்வெளிப் பயணத்தின்போது சந்திரனில் கேட்க நேர்ந்ததாக பல ஆண்டுகளுக்கு பின்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளியில் ஒலித்த இசை: நாசா வெளியிட்ட .....
Reviewed by Author
on
February 28, 2016
Rating:

No comments:
Post a Comment