மன்னார் சமாதிகளை பதிவு செய்யுங்கள் நகரசபைச்செயலாளர் அவர்களினால் மக்களுக்கு வேண்டுகோள்…. !!!
மன்னார் பொதுச்சேமக்காலையில் உள்ள அனைத்து சமாதிகளுக்கும் பதிவினைமேற்கொள்ளுமாறு மன்னார் பொதுமக்களுக்கு அன்பானவேண்டுகோளை நகரசபைச்செயலாளர் முன்வைத்தார்.
இரண்டு நாள் நிகழ்வாக மேற்கொள்ளப்படும் மன்னார் பொது சேமக்காலை துப்பரவாக்கும் பணி இன்று 27-02-201 காலை 08-12 மணிவரை நடைபெற்றதுடன் அறிவித்தலாகவும் வழங்கப்பட்டுள்ளது.
பொதுச்சேமக்காலையில் உள்ள சமாதிகள் பதிவு செய்வதன் நோக்கம் என்னவெனில் ஒவ்வொரு சமாதிக்கும் உரிய நிலப்பகுதியானது 3000 ரூபா நகர சபையினால் அறவிடப்படுகின்றது. அதே வேளை ஒவ்வொருவரும் தமது சமாதிகளை அதிக பணம் செலவு செய்து கட்டிடம் கட்டுகிறார்கள் காலம் கடந்த பின்பு அதே சமாதியில் இன்னொருவர் தனக்குசொந்தம் என்று சொல்லி மீண்டும் பயன்படுத்த அனுமதி கொடுத்த போதும் அந்த சமாதி தன்னுடைய குடும்பசமாதி என இன்னொருவர் முறைப்பாடு செய்கின்றார்.
இவ்வாறான பல முறைப்பாடுகள் பிரச்சினைகள் தினம் தினம் அதிகரித்துச்செல்வதால் அதற்கான தீர்வினை மேற்கொள்வுதற்கான திட்டம் தான் இந்த சேமக்காலையில் உள்ள சமாதிகளை பதியும் திட்டம் இத்திட்டத்தின் மூலம் அனைத்து சமாதிகளும் பதியப்பட்டு சம்மந்தப்பட்டவர்களுக்கான இலக்கத்தினை வழங்குவோம் அந்த இலக்கத்தினை சமாதிகளிளும் பதிவோம் எங்களிடம் அதற்கான ஆவணமும் நகர சபையில் இருக்கும் இதனால் இவ்வாறான பிரச்சினைகள் தொடராது என நம்புகிறேன் இனிவரும் காலத்திலும் இந்த பதிவுகள் தொடரும் மக்கள் அனைவரும் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Reviewed by Author
on
February 27, 2016
Rating:

No comments:
Post a Comment