மடு கல்வி வலயத்திற்குற்பட்ட மடு மதீனா நகர் பாடசாலையின் புதிய கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு.(படம்)
மன்னார் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட மதீனா நகர் அல்- மதீனா அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத்தொகுதி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கீழ் சுமார் 8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட ஐந்து வகுப்பறைகள் கொண்ட கட்டிடத் தொகுதியை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வகுப்பறை கட்டிடத்தொகுதியை பிரதம விருந்தினராக அமைச்சர் றிஸாட் பதியுதீன் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டனர்.
இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான பதியுதீன், மடு வலயக் கல்விப்பணிப்பாளர் ஜோன் குயின்டஸ் , பாடசாலையின் அதிபர் ஜனாப் ஏ.எல்.பிலால் மற்றும் பாடசாலை மாணவ்hகள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(17-2-2016)
மடு கல்வி வலயத்திற்குற்பட்ட மடு மதீனா நகர் பாடசாலையின் புதிய கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு.(படம்)
Reviewed by NEWMANNAR
on
February 18, 2016
Rating:

No comments:
Post a Comment