மன்னார் வங்காலை கிராம மீனவர்கள் மீது தாக்குதல்-மூவர் காயம்-2ம் இணைப்பு
மன்னார் வங்காலை மீனவ கிராமத்தில் இருந்து நேற்று வியாழக்கிழமை மாலை தூண்டல் மூலம் கணவாய் பிடிப்பதற்குச் சென்ற மீனவர்கள் மீது கடலில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் வங்காலை கிராம மீனவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக வங்காலை மீனவர் கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் ராஜன் மார்க் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவு காலம் என்பதினால் கணவாய் அதிகளவில் பிடிபபட்டு வருகின்றது.
இந்த நிலையில் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த அதிகளவான மீனவர்கள் கணவாய் பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
-இந்த நிலையில் வங்காலை கிராமத்தைச் நேர்ந்த 3 மீனவர்கள் படகு ஒன்றில் நேற்று வியாழக்கிழமை மாலை தூண்டல் மூலம் கணவாய் பிடிப்பதற்காக தொழிலுக்குச் சென்றுள்ளனர்.
-நேற்று வியாழக்கிழமை இரவு தூண்டல் மூலம் குறித்த மீனவர்கள் கணவாய் பிடித்துக்கொண்டிருந்த போது வேறு கிராம மீனவர்களினால் கடலின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள பட்டி வலையில் குறித்த கணவாய் தூண்டில் மாட்டியுள்ள நிலையில் குறித்த தூண்டலை வலையில் இருந்து எடுக்க மீனவர்கள் முற்பட்டுள்ளனர்.
-இதன் போது பிரிதொரு படகில் வந்த சிலர் எவ்வித கதைகளும் இன்றி கொண்டு வந்த இரும்புக்கம்பிகளினால் குறித்த வங்காலை கிராம மீனவர்கள் மீது கடுமையாக தாக்கியதோடு வங்காலை மீனவர்களின் படகில் காணப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்களை பறித்ததோடு,ஒரு மீனவரை கடுமையாக தாக்கி கடலில் தூக்கி எறிந்து விட்டுச் சென்றுள்ளனர்.
ஒரு மீனவர் நீந்தி கரை சேர்ந்ததோடு மேலும் ஒரு மீனவர் படகின் மூலம் கரை திரும்பியுள்ளார்.
எனினும் கடலில் தூக்கி விசப்பட்ட மீனவர் நீண்ட நேரமாகியும் கரை திரும்பாத நிலையில் வங்காலை மீனவர்கள் கடலில் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.
-இதன் போது மன்னார் சௌத்பார் கடற்கரையில் இருந்து தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் குறித்த மீனவரை மீட்டு சௌத்பார் கடற்கரைக்கு அழைத்துவந்துள்ளனர்.
பின் வங்காலை கிராம மீனவர்கள் குறித்த மீனவரை வங்காலைக்கு அழைத்து வந்துள்ள நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலில் போடப்பட்டுள்ள பட்டி வலை தடை செய்யப்பட்ட தொழிலாக காணப்படுகின்றது.குறித்த பட்டி வலைகளை அகற்றுமாறு பல தடவைகள் கோரிக்கை விடப்பட்டுள்ள போதும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்படுகின்றனர்.
வங்காலை கடலில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவில் வேறு கிராம மீனவர்கள் பட்டி வலைகளை அமைத்து கடற்தொலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் வங்காலை கிராம மீனவர்கள் கடுமையாக தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்காலை மீனவர் கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் ராஜன் மார்க் மேலும் தெரிவித்துள்ளார்.
(மன்னார் நிருபர்)
(26-02-2016)

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடிப் படகொன்றின் மீது, மற்றுமொரு படகில் வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டதால், அப்படகில் இருந்த மூன்று மீனவர்களில் ஒருவர், கடலில் குதித்து சுமார் 10 கிலோமீற்றர் தூரம் நீந்தி கரை சேர்ந்துள்ளார்.
ஏனைய இருவரும் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தின் போது, மேற்படி மீனவர்கள் மூவர் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டதாக உயிர்தப்பிய மீனவர், பொலிஸாரிடம் சென்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மாயமாகியுள்ள மீனவர்கள் இருவரையும் தேடும் பணியில் கடற்படையினரும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
ஏனைய இருவரும் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தின் போது, மேற்படி மீனவர்கள் மூவர் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டதாக உயிர்தப்பிய மீனவர், பொலிஸாரிடம் சென்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மாயமாகியுள்ள மீனவர்கள் இருவரையும் தேடும் பணியில் கடற்படையினரும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார் வங்காலை கிராம மீனவர்கள் மீது தாக்குதல்-மூவர் காயம்-2ம் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
February 26, 2016
Rating:
No comments:
Post a Comment