மாணவி ஹரிஸ்ணவியின் கொலையை கண்டித்து பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்.(படம்)
பாலியல் வன்புணர்வின் பின் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் படு கொலையை கண்டித்து மன்னாரில் இன்று (26) வெள்ளிக்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 11.15 மணியளவில் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் இடம் பெற்றது.
இதன் போது பாலியல் வன்புணர்வின் பின் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் மரணத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும்,இனி வரும் காலங்களில் இலங்கையின் காவல் துறையும் அதனுடன் இணைந்த ஏனைய சிவில் மற்றும் சமூக அமைப்புக்கள் எமது மக்களையும்,மாணவர்களையும், இளம் சிறார்களையும் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளில் முழு மூச்சாக ஈடுபட வேண்டும் என கோரி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெறவுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனிமார்க்,மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மாட்டீன் டயேஸ்,பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள்,சமூக ஆர்வலர்கள்,மதத்தலைவர்,பொது மக்கள் என பலர் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்
(26-02-2016)
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 11.15 மணியளவில் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் இடம் பெற்றது.
இதன் போது பாலியல் வன்புணர்வின் பின் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் மரணத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும்,இனி வரும் காலங்களில் இலங்கையின் காவல் துறையும் அதனுடன் இணைந்த ஏனைய சிவில் மற்றும் சமூக அமைப்புக்கள் எமது மக்களையும்,மாணவர்களையும், இளம் சிறார்களையும் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளில் முழு மூச்சாக ஈடுபட வேண்டும் என கோரி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெறவுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனிமார்க்,மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மாட்டீன் டயேஸ்,பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள்,சமூக ஆர்வலர்கள்,மதத்தலைவர்,பொது மக்கள் என பலர் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்
(26-02-2016)
மாணவி ஹரிஸ்ணவியின் கொலையை கண்டித்து பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்.(படம்)
Reviewed by NEWMANNAR
on
February 26, 2016
Rating:
No comments:
Post a Comment