அண்மைய செய்திகள்

recent
-

2020ம் ஆண்டு புகைப்பிடித்தல் முற்றாக தடை செய்யப்படும்?


எதிர்வரும் 2020ம் ஆண்டில் புகைப்பிடித்தலை முற்று முழுதாக தடை செய்ய சுகாதார, சுதேச வைத்திய மற்றும் போசாக்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு சுகாதார கல்விக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொற்றாத நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.



இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்றாத நோய்கள் பரவுவதற்கு காரணமாகிய புகைப்பிடித்தலை முற்றாக தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

புகைப்பிடித்தலை முற்று முழுதாக தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

தொற்றா நோய்கள் இலங்கையில் துரித கதியில் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் புகைப்பிடித்தலுக்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொலனறுவை உள்ளிட்ட அரசாங்க வைத்தியசாலைகள் சிலவற்றில் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுகள் உருவாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புகைப்பிடித்தலுக்கு முற்று முழுதாக தடை விதிக்கும் திட்டம் பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை.

நடைமுறைச் சாத்தியப்பாட்டுடன் இந்த புகைப்பிடித்தலுக்கான தடையை எவ்வாறு அமுல்படுத்துவது, அது வெற்றியளிக்கக் கூடிய சாத்தியம் உண்டா என்பது பற்றிய விளக்கத்தை பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிபால தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2020ம் ஆண்டு புகைப்பிடித்தல் முற்றாக தடை செய்யப்படும்? Reviewed by Author on March 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.