ஐரோப்பிய ஆணைக்குழுவால் இலங்கைக்கு 38 மில்லியன் யூரோக்கள்....
இலங்கையின் கிராமப்புற பகுதிகளில் வர்த்தகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்காக 38 யூரோ மில்லியன்களை வழங்க ஐரோப்பிய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திடும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த கையெழுத்திடும் நிகழ்விற்காக ஐரோப்பிய ஆணைக்குழுவின் சர்வதேச மற்றும் அபிவிருத்தி ஆணையாளர் மிமிகா மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அபிவிருத்தி துறையில் இலங்கையுடன் மிக நீண்ட காலமாக கொண்டுள்ள தொடர்புகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடவுள்ளதாக இலங்கை விஜயத்திற்கு முன்னர் மிமிகா வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன் யுத்ததாலும்,சுனாமியாலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரண உதவிகளை வழங்கி மீண்டும் கட்டியெழுப்புவது ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதாபிமான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்தப் புதிய ஆட்சிக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டிய தருணம் இந்த ஆணைக்குழுவிற்கு வந்துள்ளதாகவும் மிமிகா தெரிவித்துள்ளார்.
இதேவேளை மிமிகாவின் இந்தச் சுற்றுப்பயணத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அரச பிரதானிகளையும் சந்தித்து கலந்துறையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஆணைக்குழுவால் இலங்கைக்கு 38 மில்லியன் யூரோக்கள்....
Reviewed by Author
on
March 16, 2016
Rating:

No comments:
Post a Comment