ஆசிய கிண்ணம் டி20: பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்...
ஆசிய கிண்ணம் டி20 தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் வெற்றிப்பெற்றது. ஆசிய கிண்ணம் டி20 தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்கதேச அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடிப்பெடுத்தாடியது. துவக்க ஆட்டக்காரர்களாக மன்சூர் மற்றும் சர்ஜில் கான் களமிறங்கினர்.
இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதேபோல் ஹபிஸ் 2 ஓட்டங்களிலும், உமர் அக்மல் 4 ஓட்டங்களில் வெளியேறினர்.
எனினும் விக்கெட் கீப்பர் சர்பிராஸ் அகமதுவும், சோயப் மாலிக்கும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
மாலிக் 30 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 41 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
சர்பிராஸ் அகமது அதிரடியாக ஆடி 58 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில், 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை எடுத்தது.
பின்னர் 130 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து சவும்யா சர்கார் மற்றும் சபீர் ரஹ்மான் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளித்து விளையாடியனர்.
அணியின் ஓட்ட எண்ணிக்கை 46ஆக இருந்தபோது சபீர் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய சர்காரும் 48 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இறுதிக்கட்டத்தில் இணைந்த சாஹிப் அல் ஹாசன் மற்றும் மொர்டாசா ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
இதனால் 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ஓட்டங்கள் எடுத்து வங்க தேசம் வெற்றி பெற்றது.
சாஹிப் 22 ஓட்டங்களுடனும் மொர்டாசா 12 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆசிய கிண்ணம் டி20: பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்...
Reviewed by Author
on
March 03, 2016
Rating:
Reviewed by Author
on
March 03, 2016
Rating:


No comments:
Post a Comment