வட கொரியா மீது கடுமையான பொருளாதார தடை: ஐ.நா. ஒப்புதல்....
வட கொரிய தொடந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதையடுத்து அதன் மீது புதிய பொருளாதார தடை விதிக்க ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
கிழக்காசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகின்றது.
அதன் அண்டை நாடான தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வடகொரியாவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
எனினும் வட கொரியா தனது சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது.
சமீபத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனை, அணு ஆயுதங்களை நீண்ட தூரத்துக்கு சுமந்து சென்று தாக்கும் ஏவுகணை ஆகியவை தொடர்பாக சோதனை நடத்தியது.
உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் வடகொரியாவின் செயலுக்கு ஐ.நா. சபையும் கண்டனம் தெரிவித்திருந்தது.
மேலும் அந்நாடு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று உலக நாடுகளும் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் வட கொரியா மீது புதிய பொருளாதார தடை விதிப்பது தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்த மசோதாவுக்கு ஐ.நா. வின் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு அந்நாடு மீது விதிக்கப்படும் கடுமையான பொருளாதார தடை இதுவாகும்.
இதனால் வட கொரியாவுக்கு சென்று வரும் சரக்குக் கப்பல்கள் அனைத்தும் கட்டாய சோதனைக்கு உட்படுத்தப்படும்.
மேலும் ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் எதையும் அந்நாட்டுக்கு வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
வட கொரியா மீது கடுமையான பொருளாதார தடை: ஐ.நா. ஒப்புதல்....
Reviewed by Author
on
March 03, 2016
Rating:
Reviewed by Author
on
March 03, 2016
Rating:



No comments:
Post a Comment