அண்மைய செய்திகள்

recent
-

2,500 ரூபாயை வழங்காத தனியார் நிறுவன நிர்வாகிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை - அமைச்சர் செனவிரத்ன -


தனியார் துறையினருக்கு அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாயை வழங்காத தனியார் நிறுவன நிர்வாகிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழிற்துறை மற்றும் வர்த்தக உறவுகள் அமைச்சர் டபிள்யூ .ஜே.பி.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க மறுக்கும் தனியார் நிறுவன நிர்வாகிகளுக்கு எதிராக 25,000 ரூபாய் அபராதப் பணமும், 6 மாத சிறை தண்டணையும் வழங்குவதற்கு தீ்ர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சம்பள அதிகரிப்பானது தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளதோடு,தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை அதிகரிக்க தோட்ட உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் ஆகியோருடன் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

- See more at: http://www.tamilwin.com/show-RUmuyDSZSXnw6C.html#sthash.O2fm17n0.dpuf
2,500 ரூபாயை வழங்காத தனியார் நிறுவன நிர்வாகிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை - அமைச்சர் செனவிரத்ன - Reviewed by Author on March 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.