அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் 30 ஏக்கர் பரப்பளவில் காடுகளை அழித்து புதிய இராணுவ முகாம்!

முல்லைத்தீவு மாவட்டம், காசிநகர் பகுதியை அண்மித்த பகுதியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் காடுகளை அழித்து அங்கு இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
காசிநகர் பகுதியை அண்மித்த குமுழமுனை பகுதியில் கடந்;த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பாரிய காடழிப்பு பெரும் போராட்டங்களின் பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது இராணுவத்தினர் காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்தும் காடழிப்பு நடைபெற்று வருவதாகவும் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இராணுவத்தின் இந்த காடழிப்பு நடவடிக்கை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,

உப்புமாவெளி- சாமிதோட்டம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த படைமுகாம் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு காசிநகர் கிராமத்தின் பின்புறமாக உள்ள கனடியன் வீதியில் நிறைவில் உள்ள இடத்தில் சுமார் 30 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வருகிறது என்;றார்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் எம்மிடம் முறையிட்டனர். இதனையடுத்து குறித்த பகுதிக்குச் சென்று நிலைமைகளை அவதானித்தேன். முன்னர் காடழிப்பு இடம்பெற்ற நிறைவு பகுதியில் குறித்த காடழித்து இராணுவ முகாம் அமைக்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.

இந்த விடயத்தை உடனடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன். முதலமைச்சர் ஆக்கபூர்வமான நடவடிக்கையினை உடனடியாகவே எடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.

முல்லைத்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து வெவ்வேறு வடிவங்களில் காடுகள் அழிக்கப்பட்டு வருக்ன்றன.. மாவட்டத்தில் ஏனைய வளங்களும் அழிக்கப்பட்டு கேட்பாரின்றிக் கொள்ளையிடப்படுகிறது.

இதனைத் தட்டிக்கேட்க முடியாது முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கும் நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது எனவும் ரவிகரன் மேலும் தெரிவித்தார்.


முல்லைத்தீவில் 30 ஏக்கர் பரப்பளவில் காடுகளை அழித்து புதிய இராணுவ முகாம்! Reviewed by Admin on March 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.