அண்மைய செய்திகள்

recent
-

'விவாகரத்தும் சீரழியும் சமூகங்களும்'-சுதன் Law

இலங்கையில் பதினாறு இலட்சம் விவாகரத்து வழக்குகள் நிலுவையிலுள்ளது.இலங்கை நீதிமன்ற வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளாக விவாகரத்தே(Divorce) உள்ளது.இவ் எண்ணிக்கை குடுப்பத்தொதையுடன் ஒப்பிடுகையில் 39% ஆக உள்ளது.அதாவது 647 குடும்பம்(தம்பதி)கு ஒரு தம்பதியினர் விவாகரத்து பெறுகின்றனர்.இவ் புள்ளி விபரங்கள்படி அண்மைக் காலமாக விவாகரத்து பெற்றுக் கொள்ளுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதோடு அதில் இளம் வயது தம்பதியினரே கூடுதாக உள்ளனர்.

விவாகரத்து அதிகமாவதற்கு என்ன காரணம் என்று ஆராய்வோமானால் பல பிரச்சனைகள் அங்கு நிலவுகிறது.முதலாவதும் மூலப் பிரச்சனையாக "கணவன்−மனைவிக்கு இடையே சரியான புரிந்துணர்வு இன்மையாகும்".புரிந்துணர்வு என்பது வயது,விருப்பு வெறுப்பு,அறியாமை,நம்பிக்கையீனம்,நோய்,உறவினர்,பிடிவாதம்,வறுமை,ஆண்மை(பெண்மை)யீனம்,தாம்பத்தியம்,தராதரம்...போன்றவற்றில் தங்கியுள்ளது.பொதுவாக ஒரே வயதையொத்தவர்கள் மற்றும் அதிக வயது வித்தியாசத்தில் திருமண  செய்தோர்களிடமே  அதிக கருத்து வேறுபாடு காணப்படுவதுடன் இவர்களிடம் புரிந்துணர்வினை காணவே முடியவதில்லை..இங்கு விட்டுக் கொடுப்பிற்கு இடமேயிருக்காது.

கணவன்-மனைவி உறவானது புனிதம் என்பதனைவிட முன்மாதிரியானதாகும்.காரணம் குழந்தைகள் அம்மா,அப்பாவினை வழிகாட்டியாகவே நினைத்து வாழ பழகுகின்றனர்.பெற்றோர்கள் சண்டையிடுவதனால் அவர்களது நடத்தையிலும் மாற்றம் ஏற்படும்.ஆய்வுகளின் படி'உலகில் பயங்கரமான குற்றவாளிகள் அவர்களது பெற்றோர்களின் சண்டை அல்லது ஒற்றுமையீனத்தின் காரணமாகவே உருவாகின்றனர்"ஒரு தாய் தனது பிள்ளை என்ற உணர்வு இன்றி கடைமைக்காக மட்டும் பாலுட்டும் தாய் மார்களின் பிள்ளைகள் கூட குற்றவாளிகளாக வாய்புண்டு.அவ்வாறு இருக்கும் போது பெற்றோர் சண்டையிட்டால் குழந்தைகளின் நிலை என்ன?

ஒரு குடும்ப கட்டமைப்பு சரியாக இருந்தால்தான் அந்த சமூக கட்டமைப்பும் ஒழுங்குபடுத்தப்படும்.இதற்கு குடும்பத் தலைவர்களிடம் ஒற்றுமை இருக்க வேண்டும்.அதை விடுத்து சின்ன பிரச்சனை என்றாரலும் Divorce,Mis call வந்தாலும் Divorce,வேலைக்கு போனாலும் Divorce போகாதுவிட்டாலும் Divorce..Divorce..Divorce..என்ன இது?நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம்.நாம் நன்கு பகுத்தறியக்கூடிய மனித பிறவிகள்.நன்கு திட்டமிட்டு விருப்பத்தோடுதானே திருமணம் செய்கிறோம்.செய்த பின் ஏன் நன்கு தீர்க்கமாக யோசிப்பதில்லை..இது விளையாட்டு இல்லை.

ஒரு தடைவை இல்லாவிடினும் பல தடைவைகள் விளையாடலாம்.வாய்ப்பு,சலுகை நிறையவே உள்ளன.ஆனால் ஒரு தடைவை Divorce எடுத்தால் திரும்ப சேருவது என்பது..ஐயோ!..மனசார சேர்ந்திடலாம்.ஆனால் சட்டப்படி அது மிக கடினமானது.சிலர் ஏதோ தனது பிடிவாதத்தினால் Divorce பெற்று விடுவார்கள்.அதற்கு பிறகுதான் அவர்களுக்கு "சுடலை ஞானம்"வரும்..அதனால் என்ன பலன்?

இது சொல்வதால் பலனில்லை.அனுபவித்தால்தான் அதன் கஷ்டமும் வலியும் புரியும்.அதனை நாம் தொழில் ரீதியில் செய்யினும் அதனால் வருகின்ற கவலை தாங்க முடியாததாக இருக்கும்.இது எங்களுக்கும் பாரிய மன உழைச்சல் தான்.இதனை சட்டத் தரணிகளால் தடுக்க முடியாது.அதனால் எமது மன வெளிப்பாட்டினை இச் செய்தி மூலம் தெரிவிக்கின்றேன்.

குடும்ப வாழ்க்கை பிரச்சனையில்லாமல் இருப்பதற்கு சில வழி முறைகளை தெரிவிக்கின்றேன்.முடிந்தால் கடைப்பிடிங்கள்.


  • தம்பதியினர் தமக்கிடையிலாக அசைக்க முடியாத ஒரு உறுதியான பிணைப்பினை ஏற்படுத்தி வைக்க வேண்டும்.காரணம் எனது மனைவி என்னோடு உயிராக இருந்தாலும் அது சின்ன சலனத்தினால் பிரிந்து போக வாய்ப்புண்டு.அது நிச்சயம் நடக்கும்.இதற்குதான் ஒரு வகையான உறுதியான பிணைப்பினை ஏற்படுத்த வேண்டும்.உதாரணத்திற்கு நான் பல்கலைக் கழகத்திலிருந்த போது என் காதலிக்கு அடிக்கடி கோபமும் சந்தேகமும் வரும்.எப்போதும் சண்டை..சண்டை..ஆனால் இன்று வரை பிரிந்ததில்லை.காரணம் எங்களுக்குள் ஒரு பிணைப்பினை ஏற்படுத்தி வைத்துள்ளோர்.இதனால் கடவுளால்கூட எங்களை பிரிக்க முடியாது.அது என்ன மந்திரம் என்றால்.(........)என்ற சாதாரண வசனம்தான்.ஆனால் உயிருள்ள வசனம்.எங்களுக்குள் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் இந்த வசனத்தினை யார் முதலில் கூறுகிறாரோ அடுத்த நிமிடமே மற்றவர் எல்லாத்தையும் மறந்துவிட்டு பழய நிலைக்கு திரும்ப வேண்டும்.இதைக் கேட்க சிரிப்பீர்கள்.ஆனால் இன்றுவரை நாம் தம்பதியினராக இருப்பதற்கு அந்த வசனம்தான் காரணம்.காரணம் நாங்கள் அந்த வசனத்தினை தேவ வசனமாக பார்க்கிறோம்..அதுபோல் நீங்களும் ஏதாவது வசனத்தினை அல்லது குறியீட்டினை பயன்படுத்துங்கள்.ஆனால் அதனை உயிராக மதிக்க வேண்டும்.'உயிர் போனாலும் அவ் வசனத்தினை மீற மாட்டோம்'என்ற சபதத்தினை மேற் கொள்ள வேண்டும்.



  • உனது துணைக்கு நம்பிக்கையாக இருக்க வேணும்.நீ திருமணம் முடிக்கும் முன்பு எப்படி இருந்தாலும் முடித்த பின் நம்பிக்கையாக இரு.அதற்காக "அனைத்தையும் சொல்லாதே,எல்லாவற்றையும் மறைக்காதே"உனது துணையின் மனநிலையினை புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்.ஒரு தடைவை நான் எனது மனைவிக்கு உண்மையாக இருக்கனும் என்பதற்காக 'குறித்த பெண் என்னை பரீஷம் பண்ணியதினை' மனைவியிடம் (ரொம்ப நேர்மையாக இருக்கனும் என்று எண்ணி நம்பி) கூறினேன்.அன்று எனக்கு பயங்கர கவனிப்பு..அன்பு மழை பொழிந்தது.அன்றிலிருந்து வீட்டிற்கு போன பின் என் மனைவி என்னை கட்டியணைத்து தழுவுவாங்க.நானும் அன்பில் நெகிழ்ந்து போனேன்.பிறகுதான் தெரிந்தது.என் சட்டையில் பெண்ணின் முடி இருக்கின்றதா என்று பார்க்கதான் அந்த  கட்டி தழுவல் என்று.சரி முடி இருக்காது என்று கூறினாலும்"மொட்டை அடித்த பொட்டையிடம் போனால் எப்படி முடி இருக்கும்"என்று கேள்வி வேற...எனவே  உன் துணையின் மனநிலை அறிந்து கூறுங்கள்  



  • உங்களுடைய துணைக்கு கொடுக்க வேண்டிய மரியாதையினை கொடுங்கள்.நீ காதலிக்கும் போது உன் துணையை மரியாதையின்றி நடத்திருக்கலாம் அல்லது அழைத்திருக்கலாம்.ஆனால் திருமணத்தின் பின் அதற்குரிய மரியாதையினை வழங்கிவிடு.மரியாதை இல்லாத தம்பதியினரிடம் அன்பும் குறைகின்றது.



  • உனக்கும் உன் துணைக்கும் இடையில் கடவுளைக்கூட வராமல் பார்த்துக்கொள்.நீயும் உன் துணைக்கும் மட்டும்தான் மன உணர்வுகள்(Telepathy)வேலை செய்யும்.வேறு எவருக்கும் உங்கள் இருவரதும் உணர்வுகள் புரியாது.புரியவும் வாய்ப்பும் இல்லை.எனவே யாரையும் உங்கள் இருவருக்குமிடையே வர இடம் கொடுக்க வேண்டாம்.உங்கள் இருவருக்கும் பிரச்சனை என்று தெரிந்தால் எங்கிருந்தோ ஒரு "சனி" பிரச்சனையை தீர்ப்பதாக சொல்லி உங்கள் இருவருக்குமிடையில் வந்து ,நிரந்தரமாக பிரித்து விடும்.அதற்கு இடம் கொடுத்தால் சனி அதனுடைய வேலையை செய்யும்.ஒன்று மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்.உங்கள் இருவருக்குள்ளும் சிறு பிரிவு வந்தால் போதும் சுற்றியிருக்கும் வைரசுகள் ஊதி பெரிதாக்கி நிரந்தரமாக பிரித்துவிடுங்கள்.பிரிந்திருக்கும் போது ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கும்.பின்பு அது பழகி விடும்.இந்த இடைவெளியில் உனக்கு ஆறுதலுக்கு இன்னுமொரு "நபர்"கதைத்தாலும் அது ஆறுதலாகதான் இருக்கும்.அது அந் நபரில் அனுதாபமாகி அன்பாகி வம்பில் முடியும்.பின் அதுவே நிரந்தர பிரிவிற்கு காரணமாகும்.ஆகவே யாரையும் தரகராக்கவோ,கேட்பார் புத்தியும் கேட்க வேண்டாம்.



  • தம்பதியினருக்கிடையில் தாம்பத்தியம் மிக முக்கியமானது.தாம்பத்தியம் என்பது வெறும் உடல் சார்ந்தது மட்டுமல்லது.அது மனசு சார் புனிதமானது.தாம்பத்திய திருப்தியின்னையினால் 43% தம்பதியினர் Divorce கு போகின்றனர்."ஆசை திருப்தியானாலும்  துணையினை 'இவர் எனது உயிர்'என்ற உணர்வோடு,அன்போடு கட்டி தழுவி துாங்குகின்ற தம்பதியினர் பிரிந்து செல்லும் விகிதம் குறைவாகும்"என்று ஆய்வு கூறுகிறது.



  • முடிந்தவரை உன் துணையினை விட்டு விலகியிருப்பதனை தவிர்த்துக் கொள்.குறிப்பாக வெளிநாட்டுக்கு செல்வதனை தவிர்க்கவும்.இல்லையேல் உன் துணையினையும் அழைத்து செல்..76% தம்பத்தினர் பிரிவிற்கு காரணம்'தனது துணை வெளி நாடு செல்வதனால் தகாத உறவுகள் ஏற்பட்டு அதன் காரணமாக Divorce பெறுகின்றனர்.

இன்று இவர்களுக்கு நாளை உனக்கு?.அதற்கு நீ இடம் கொடுக்காமல் உனது வாழ்க்கை துணையுடன்(Life Partner) காலம் பூராகவும் சந்தோஷமாக வாழ விரும்பினால் நாம் கூறும் அறிவுறைகளை கேளு.மாறாக "நான் பிடிவாதமாகத்தான் இருப்பேன்"என்று நினைத்தால் தாரளமாக Divorce கு வந்து நில்லுங்கள்.எங்களுக்கும் புழைப்பு நடக்கதானே வேணும்?63%வக்கீல்களை Divorce வழக்குகள்தான் வாழ வைக்கின்றன.

ஆக்கம்:-சுதன்  Law
'விவாகரத்தும் சீரழியும் சமூகங்களும்'-சுதன் Law Reviewed by NEWMANNAR on March 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.