அண்மைய செய்திகள்

  
-

பாம்புக்கடிக்கு இலக்காகிய மன்னார் தோட்டவெளி கிராமத்தைச் சேர்ந்த மாற்றாற்றல் கொண்ட இளைஞன் மரணம்.(படம்)

மன்னாரில் பாம்புக்கடிக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாற்றாற்றல் கொண்ட இளைஞன் ஒருவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மன்னார் தோட்டவெளி கிராமத்தைச் சேர்ந்த மாற்றாற்றல் கொண்ட லெபோன் தற்குரூஸ் ஜெபநேசன்(வயது-26) என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் கடந்த 29 ஆம் திகதி இரவு தோட்டவெளி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து காட்டுப்பாதையூடாக உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற போதே பாம்பின் கடிக்கு உள்ளாகியுள்ளார்.

உடனடியாக குறித்த இளைஞன் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் நேற்று புதன் கிழமை இரவு மேலதிக சிகிச்சைக்காக யாழ்பபாணம்; வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் குறித்த இளைஞனின் நிலை கவலைக்கிடமான நிலையில் காணப்பட்டமையினால் குறித்த இளைஞன் மீண்டும் மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த இளைஞன் இன்று வியாழக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்தார்.


(மன்னார் நிருபர்)
(3-3-2016)

பாம்புக்கடிக்கு இலக்காகிய மன்னார் தோட்டவெளி கிராமத்தைச் சேர்ந்த மாற்றாற்றல் கொண்ட இளைஞன் மரணம்.(படம்) Reviewed by NEWMANNAR on March 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.