மன்னார் பெரியமடு தெளிவாறு பகுதியின் சட்டவிரோத மண் அகழ்வு-நேரில் சென்று பார்வையிட்ட பா. உ .சாள்ஸ் நிர்மலநாதன்-VIDEO
பெரிய மடு பகுதியில் உள்ள ஈச்சளவக்கையில் குடியிருக்கும் மக்களுக்கு சொந்தமாகவுள்ள பெரியமடு தெளிவாறு பகுதியில் இம்மக்களுக்குரிய மேட்டுநில செய்கைக்கான காணிகள் உள்ளன.
யுத்தத்திற்கு முன்பு அப்பகுதியில்மேட்டுநில பயிர்ச்செய்யை அம் மக்களால் மேற்கொள்ளப்பட்டு தமது வாழ்வாதாரத்ததை நிவர்த்தி செய்துவந்தனர். யுத்தத்தின் பின்னர் அப்பகுதியில் மிதிவெடிகளின் அச்சுறுத்தல்களால் இன்றுவரை மக்கள் மேட்டுநில செய்கையில் ஈடுபடாமல் இருந்துவருகின்றனர்.
தற்பொழுது அப்பகுதியில் சிலர் இன்றுவரை அம்மக்களுக்குரியநிலங்களில் மணல் அகழ்வினை மேற்கொண்டு வருகின்றார்கள். இதுவிடயமாக அம்மக்களால் 2004ம் ஆண்டுமுறைப்பாடு செய்யப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதுவிடயம் தொடர்பாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களிடம் முறையிட்டதன் பேரில் அப்பகுதிக்கு நேற்று (16/03/2016) நேரில் சென்று பார்வையிட்டபோது அங்கு மக்களுடைய காணிகளில் 6 அடிக்குமேல்ஆளம்வரை மண்ணகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதனிக்க முடிந்தது.
இதுதொடர்பாக மாந்தைமேற்கு பிரதேசசெயலாளரிடம் தொடர்பு கொண்டபோது, அவர் அப்பகுதியிலுள்ள M .S சாகுல் அமீது அவர்களுக்கும், நசார் அவர்களுக்கும் 2015/6/ 24ம் திகதி தலா 150 கியுப் ஆற்றுப்படுக்கையில் உள்ள மணலை அகழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மக்கள் குடியிருப்பு நிலங்களிலுள்ள மணலை அகழ்வதற்கு அனுமதி
வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.
அதேவேளையில் இக்காணிக்குரிய மக்கள் கூறுகையில் இவற்றை கண்காணிக்கும்அனுமதி வழங்கும் அரச அதிகாரிகளின் ஆதரவுடனே இன்றுவரை நடைபெற்று வருவதாகவும், இதனால் தங்களுடைய நிலங்கள் யாவும் மேட்டுநில செய்கைக்கு அற்ற மாறும் தன்மை கொண்டதாகவும் உள்ளது என விசனத்தை வெளிப்படுத்தியதோடு இம் மணல் அகழ்வினை மேற்கொண்டு வருபவர் மீது நடவடிக்கை எடுத்து இதற்கான மாற்று
வழிகளை பெற்றுத்தருமாறும் வேண்டிக்கொண்டனர். மேலும் இவ்விடயம் தொடர்பாக 14/3/2016 அன்று நடைபெற்றமன்னார் அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டி உரியநடவடிக்கை எடுக்குமாறும் கேட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
March 17, 2016
Rating:

No comments:
Post a Comment