மொபிடெல் நிறுவனத்தின் சமூக பொறுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு.-Photos
மொபிடெல் நிறுவனத்தின் சமூக பொறுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் வைபவம் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
மன்-பூநொச்சிக்குளம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் பாடசாலை அதிபர் ஆரிப் அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
குறித்த பாதணிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளரும் மன்னார் மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் இணைப்பாளருமான எஸ்.ஏ. ஹினாயத்துல்லா, விசேட விருந்தினர்களாக எஸ்.எல்.ரி மொபிடெல் நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் சதீஸ் ஜகதீசன் , உதவிப் பிரதேச முகாமையாளர் முஹம்மது முஹர்றிம் ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாதணிகளை வழங்கி வைத்தனர்.
மேலும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு, பெற்றோர்கள் மற்றறும் நலன் விரும்பிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றியதோடு பாடசாலையில் மாணவர் கண்காட்சியும், மாணவர் சந்தையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மொபிடெல் நிறுவனத்தின் சமூக பொறுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 18, 2016
Rating:

No comments:
Post a Comment