கருத்தடை மாத்திரைகளை கட்டாயப்படுத்தி வழங்கும் ஐ.எஸ்...
ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் பிடியில் உள்ள பாலியல் தொழில் புரியும் அடிமைகள் கர்ப்பம் தரிக்காமலிருக்க அவர்களுக்கு கருத்தடை மாத்திரைகளை கட்டாயப்படுத்தி வழங்கி வருகிமை தெரிய வந்துள்ளது.
ஈராக்கில் அட்டகாசம் செய்து வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் யசிதி இன பெண்களை கடத்திச் சென்று பாலியல் அடிமைகளாக வைத்து தீவிரவாதிகள் தினமும் பாலியல் பலாத்காரம் செய்து வருகின்றனர். அவர்கள் 8 வயது சிறுமிகளைக் கூட கதறக் கதற பலாத்காரம் செய்வது தெரிய வந்துள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகள் பின்பற்றும் இஸ்லாமிய சட்டத்தின்படி கர்ப்பமாக இருக்கும் அடிமையை பலாத்காரம் செய்யக் கூடாது.இதனால் தீவிரவாதிகள் அவர்களுக்கு கருத்தடை மாத்திரைகள், ஊசிகளை கட்டாயப்படுத்தி அளித்து வருகிறார்கள்.
தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்த பாலியல் அடிமை பெண் ஒருவர் கூறுகையில், தீவிரவாதி என்னை பலாத்காரம் செய்யும் முன்பு தினமும் அவர் கண் முன் ஒரு கருத்தடை மாத்திரையை விழுங்கச் செய்தார். மாதத்திற்கு ஒரு டப்பா மாத்திரை அளித்தார். என்னை மற்றொருவருக்கு விற்றபோதும் கருத்தடை மாத்திரைகள் அளித்தனர்.
மேலும், பெண் ஒருவர் கர்ப்பமான போது அவரை கட்டாயப்படுத்தி கருச்சிதைவு மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வைத்துள்ளனர். மேலும் ஒரு கர்ப்பிணி கருவை கலைக்க மறுத்தபோது தீவிரவாதிகள் அவரது வயிற்றில் திரும்பத் திரும்ப கையால் ஓங்கிக் குத்தினர் என்று தெரிவித்தார்.
கருத்தடை மாத்திரைகளை கட்டாயப்படுத்தி வழங்கும் ஐ.எஸ்...
Reviewed by Author
on
March 15, 2016
Rating:

No comments:
Post a Comment