அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு முதல்வரால் பேரூந்து நிழற்குடை திறந்துவைப்பு...14-03-2016



மன்னார் பேசாலை முருகன் கோவில் பகுதியில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால் அமைக்கப்பட்ட பேரூந்து நிழற்க்குடையினை இன்று 14-03-2016 திங்கள் காலை 11:30 மணியளவில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது அழைப்பின் பேரில் கலந்துகொண்ட  வடக்கு முதல்வர் உயர் திரு நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் திறந்துவைத்ததோடு, அங்கு கடந்த ஆண்டு கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு வழங்கப்பட்ட அரைக்கும் ஆலை வினைத்திறனுள்ள நிலையில் இயங்கும் நிலையில் அதனையும் பார்வையிட்டதோடு, கிராமத்து மக்களுடன் அவர்களது தேவைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.

நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் பிரிமுஸ் சிறைவா அவர்களும் மன்னார் பிரதேச செயலாளர், மடு பிரதேச செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மன்னார் பிரதேச சபையின் செயலாளர், வீதி அபிவிருத்தித் திணைக்கள மன்னார் மாவட்ட பொறியியலாளர் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.















வடக்கு முதல்வரால் பேரூந்து நிழற்குடை திறந்துவைப்பு...14-03-2016 Reviewed by Author on March 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.