வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்களையும் சிறையில் அடைக்கும் நல்லாட்சி அரசாங்கம்! வடக்கு ஆளுனர் விமர்சனம்
வெளிநாட்டிலிந்து வருகை தரும் தமிழர்களையும் நல்லாட்சி அரசாங்கம் சிறையில் அடைத்துக் கொண்டிருப்பதாக வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் வேண்டுகோளுக்கு இணங்க வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே மெகசின் சிறைச்சாலைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருந்தார்.
அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இந்த அரசாங்கம் தன்னை நல்லாட்சி மற்றும் நல்லிணக்க அரசாங்கமாக அழைத்துக் கொள்கின்றது. ஆனாலும் இந்தச்சிறைக்குள் அடைபட்டிருக்கின்றவர்கள் மத்தியில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரும் இருக்கின்றார். இதுதான் நல்லாட்சியின் லட்சணமா என்ற கேள்வி எமக்குள் எழுகின்றது என்று ரெஜினோல்ட் குரே கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதற்கிடையே வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் அப்பாவித் தமிழர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி மைத்திரி-ரணில் கூட்டரசாங்கம் துன்புறுத்தி வருவதாக சர்வதே மனித உரிமை அமைப்புகளும் இதற்கு முன்னதாக குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்களையும் சிறையில் அடைக்கும் நல்லாட்சி அரசாங்கம்! வடக்கு ஆளுனர் விமர்சனம்
Reviewed by Author
on
March 09, 2016
Rating:

No comments:
Post a Comment