ராக்கெட் போல வெடித்த மின்சார சிகரெட்: நூலிழையில் உயிர் தப்பிய மகன் ----படங்கள் இணைப்பு
இங்கிலாந்தில் திடீரென வெடித்து சிதறிய எமின்சார சிகரெட்டால் தந்தை மற்றும் மகன் ஆகியோர் காயமடைந்தனர்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரைச் சேர்ந்தவர் மைக் பென்னட்.
இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ஸ்கேட்டிங் அரங்கில் ஸ்கேட்டிங் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த மின்சார சிகரெட் திடீரென வெடித்து சிதறியது.
இதில் ராக்கெட் போல தீப்பிழம்பாக வெளிப்பட்ட நெருப்பு சிதறல்களால் அவரது கால்கள் பெரிதும் சேதமடைந்தது. அருகில் இருந்த அவரது மகன் சிறு காயங்களுடன் நூலிழையில் தப்பினார்.
மின்சார சிகரெட் வெடிப்பதற்கு சில நொடிகள் முன் வரை சிறுவன் தனது தந்தையின் அருகிலேயே இருந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டரியை இயக்காத போதும் இந்த விபத்து எப்படி நேர்ந்தது என்பது தெரியவில்லை என கூறிள்ளார் மைக் பென்னட்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருடை கால் நிரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எலக்ட்ரானிக் சிகரெட்டால் நேர்ந்த விபத்து இது முதன்முறையல்ல. கடந்த வாரம் ஜனா பார்கர் என்ற பெண்ணின் கால்களும் காரில் செல்லும்போது அவரது கைப்பையில் இருந்த இதே நிறுவன சிகரெட்டால் புகைந்துள்ளது.
ராக்கெட் போல வெடித்த மின்சார சிகரெட்: நூலிழையில் உயிர் தப்பிய மகன் ----படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
March 01, 2016
Rating:

No comments:
Post a Comment