சவுதியில் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் இலங்கைக்கு வந்துள்ளது! இறுதிக்கிரியை இன்று
சவுதி அரேபியாவில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாத்தளை, உக்குவளை பரகாவெலயைச் சேர்ந்த இராமையா கிருஸ்ணகுமார் உதயகுமாரியின் உடல் நான்கு மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரு பிள்ளையின் தாயாரான உதயகுமாரி கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி தொழிலுக்காக சவுதி அரேபியாவிற்குச் சென்றிருந்தார்.
தனது கணவரான தங்கராஜ் யோகராஜா, சவுதி அரேபியா சென்று 15 நாட்களில் இவரும் அங்கு சென்றதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.
இருவரும் ஒரே உரிமையாளரின் ஹோட்டல் மற்றும் வீட்டில் தொழில் புரிந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி இரவு, உதயகுமாரி சவுதி அரேபியாவில் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாக உறவினர்களுக்குத் தகவல் கிடைத்திருந்தது.
எனினும், உதயகுமாரியின் உடலை இலங்கைக்குக் கொண்டு வருவதில் நிலவிய தாமதம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உதயகுமாரியின் கணவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கைக்கான சவுதி தூதரகம் அறிவித்திருந்தது.
சவுதி அரேபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட உதயகுமாரியின் பூதவுடல் மாத்தளையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக்கிரியை இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
சவுதியில் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் இலங்கைக்கு வந்துள்ளது! இறுதிக்கிரியை இன்று
Reviewed by Author
on
March 26, 2016
Rating:

No comments:
Post a Comment