வெவ்வேறு ஆண்கள் மூலம் குழந்தை பெற்ற தாய்..!
வியட்நாமில் வெவ்வேறு ஆண்கள் மூலம் ஒரு பெண்ணிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு வருடங்களுக்கு முன் வியட்நாமில் உள்ள ஹனோய் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
பிறப்பில் அவர்கள் இரட்டையர்களாக இருந்தாலும் இருவரின் உடல் மற்றும் தோற்ற அமைப்புகள் மிகுந்த வேறபாடுகளுடன் காணப்பட்டதால் சந்தேகமடைந்த தந்தை பிரசவத்தின் போது குழந்தைகள் மாற்றப்பட்டு விட்டதாக நினைத்தார்.
அதனால் , டி.என்.ஏ பரிசோதனைக்கு செய்த வேளை அதன் முடிவில் அந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் அவருக்கு பிறந்தது என்றும் மற்றொரு குழந்தை வேறு ஒரு ஆணுக்கு பிறந்தது என்பது உறுதி செய்யப்பட்டது.
அந்த இரட்டை குழந்தைகளின் தாயார் தனது கணவருடனும், மற்றொரு நபருடனும் உடலுறவு கொண்டிருந்தமையால் இந்த இருவரின் உயிரணுக்களும் அந்த பெண்ணின் 2 வேறு கருமுட்டைகளுடன் கலந்து கரு உருவாகி வளர்ந்துள்ளது.
பிரசவத்தின் போது இந்த குழந்தைகள் ஒரு சில மணி நேர இடைவெளியில் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்பு உலகில் மிக அதிசயமாக நடைபெறக் கூடியது என்று மருத்துவ நிபுணர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
வெவ்வேறு ஆண்கள் மூலம் குழந்தை பெற்ற தாய்..!
Reviewed by Author
on
March 16, 2016
Rating:

No comments:
Post a Comment