சிவபூமியாம் மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் மஹா சிவராத்திரி இன்று 07-03-2016- முழுமையான படங்கள் இணைப்பு
சிவபூமியாம் மன்னார் பாடல் பெற்ற தலமான திருக்கேதிஸ்வரத்தில் மஹாசிவராத்திரி இன்று 07-03௨016 மிகவும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது எதிர்பார்த்தது போலவே 3இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்த கோடிகள் சிவனை தரிசிக்கவும் சிவலிங்கத்திற்கு பாலாவியில் இருந்து பால்குடம் பவனியும் திருமறை ஓதலும் பூராணவிளக்கங்களும் இசைத்தவண்ணம். மின்னொளிகலில் பக்தர்களின் விரதங்கள் நேர்த்திக்கடன்கள் கண்விழிப்பும் மிகவும் பரவசம் தருகின்றது.
மன்னார் அருள் மிகு திருக்கேதீஸ்வர ஆலய மஹா சிவராத்திரியில் 3 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு.(படம்)
மன்னார் நிருபர்
8-03-2016
மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தளத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற மஹா சிவராத்திரி உற்சவத்தில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்திய அரசின் உதவித்திட்டத்தின் கீழ் மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வர ஆலய புனரத்தான வேலைகள் இடம் பெற்று வருகின்ற போதும் சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயம் வரும் பக்தர்களின் நலன் கருதி பூசை வழிபாடுகள் அனைத்தும் திருவுருவங்கள் பாலஸ்தானம் செய்யப்பட்டுள்ள வசந்த மண்டபத்தில் நடை பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இடம் பெற்றது.
அபிசேகம், அர்ச்சனை நிகழ்வுகளும் அலங்கார மண்டப சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றதோடு விசேட பூசை வழிபாடுகளும் இடம் பெற்றது.
இந்திய அரசின் உதவித்திட்டத்தின் கீழ் மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வர ஆலய புனரத்தான வேலைகள் தற்போது இடம் பெற்று வருகின்ற போதும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயம் வரும் பக்தர்களின் நலன் கருதி பூசை வழிபாடுகள் அனைத்தும் திருவுருவங்கள் பாலஸ்தானம் செய்யப்பட்டுள்ள வசந்த மண்டபத்தில் இடம் பெற்றது.இந்த நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு பொலிஸ் பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டு எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி சிறப்பான முறையில் மஹா சிவராத்திரி அனுஸ்ரிக்கப்பட்டது.
சிவபூமியாம் மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் மஹா சிவராத்திரி இன்று 07-03-2016- முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
March 08, 2016
Rating:
No comments:
Post a Comment