கவுசல்யாவின் அப்பா சொல்லி தான் கொலை செய்தோம்: 5 பேர் பரபரப்பு வாக்குமூலம்
கவுசல்யாவின் அப்பா சொல்லியே இந்த கொலையை செய்ததாக உடுமலை ஆணவக்கொலையில் தொடர்புடைய 5 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சாதி மாறி காதல் திருமணம் செய்த காரணத்துக்காக தலித் இளைஞர் சங்கர், அவரது மனைவி கவுசல்யா ஆகியோரை கடந்த 13-ம் திகதி உடுமலை பேருந்து நிலையம் அருகே மர்ம கும்பல் கொடூரமாக வெட்டியது.
இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். கவுசல்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி பகுதியில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக 5 பேர் கொண்ட கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து நடந்த பொலிஸ் விசாரணையில், அவர்கள் பழனியைச் சேர்ந்த மணிகண்டன் (25), திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜெகதீசன் (31), மைக்கேல் என்கிற மதன் (24), செல்வக்குமார் (25), மணிகண்டன் (39) என்பது தெரியவந்தது.
இவர்கள் கவுசல்யாவின் உறவினர்கள் என்பதும், கவுசல்யாவின் தந்தை சொல்லியே இந்த கொலையை செய்ததும் தெரியவந்துள்ளது.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், மகள் சாதி மாறி திருமணம் செய்ததால் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி அவமானத்தில் இருந்தார்.
ஒரு திருமண நிகழ்வில் ஏற்பட்ட அவமானத்தில் ஆத்திரமடைந்து இவர்களை கொல்ல வேண்டும் என எங்களிடம் கூறினார்.
அதன் அடிப்படையிலே இந்த கொலையை நாங்கள் செய்தோம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதில், கவுசல்யாவின் உறவினர்கள் மேலும் சிலருக்கு தொடர்பிருப்பதாகவும் அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.
ஜெகதீசன் என்பவரிடம் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி இருவரையும் கொன்றுவிடச் சொல்லி 50 ஆயிரம் ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணம், இரு பைக் மற்றும் ஆயுதங்களையும் பொக்லிசார் கைப்பற்றி உள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஏற்கனவே நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை காவலில் எடுத்து விசாரிக்க பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.
கவுசல்யாவின் அப்பா சொல்லி தான் கொலை செய்தோம்: 5 பேர் பரபரப்பு வாக்குமூலம்
Reviewed by NEWMANNAR
on
March 16, 2016
Rating:

No comments:
Post a Comment