அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பில் வரலாறு காணாத வெப்பம்! உடல் உள்ளுறுப்புகளை பாதிக்கும்! கர்ப்பிணிகளுக்கும் எச்சரிக்கை...


கொழும்பில் இம்முறை வரலாறு காணாத வெப்ப நிலை நிலவும் அதே நேரம், இந்த வெப்பத்தின் காரணமாக உடல் உள்ளுறுப்புகள் பாதிப்படையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் சென்னை உள்ளிட்ட பிரதேசங்களில் வருடந்தோறும் நிலவும் கத்திரி வெயில் என்றழைக்கப்படும் உயர்வெப்ப நிலைக்கு சமாந்தரமான முறையில் கொழும்பிலும் தற்போது வெப்ப நிலை அதிகரித்துள்ளது.

கொழும்பில் தற்போது 33.3 செல்சியஸ் வெப்பநிலை நிலவுகின்றது. பொதுவாக மனித உடல் 31 செல்சியஸ் வரையான வெப்ப நிலையை மட்டுமே தாங்கிக் கொள்ளும் சக்தி கொண்டது.

அதற்கு கூடிய வெப்ப நிலை நிலவும் போது சிறுநீரகங்கள், இருதயம் மற்றும் மூளையின் செயற்பாடுகள் பாதிப்படையலாம் என்று கூறப்படுகின்றது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய வான் வெளியின் உயர்அடுக்கில் வீசும் காற்றில் போதுமான ஈரப்பதன் இல்லாதிருப்பதன் காரணமாக மேகங்கள் உருவாகும் நிலை தடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே வெப்ப நிலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பின் தற்போதைய வெப்பநிலையானது எதிர்வரும் மே மாதம் வரையிலும் நிலவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிக வெப்பம் தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்ப நிலை தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போத அசாதாரணமான வெப்ப நிலைமை காணப்படுகின்றது.

கர்ப்பிணி பெண்களின் சாதாரண உடல் வெப்பநிலை அதிகரித்தால் அது கருவை பாதிக்கும் என மகப்பேற்று மருத்துவ நிபுணர் டொக்டர் ருவான் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்�

கர்ப்பிணி தாய்மாரின் உடல் வெப்பநிலை 38 பாகை செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயர்வடைந்தால் கரு கலையக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.

38 செல்சியஸ் பாகை வெப்பநிலையில் கர்ப்பிணிகள் நான்கு மணித்தியாலத்திற்கு மேல் இருந்தால் அது கருவில் இருக்கும் சிசுவைப் போன்றே தாய்மாரையும் பாதிக்கும்.

அதிக வெப்ப நிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தடுக்க கர்ப்பிணி தாய்மார் அதிகளவு நீரை பருக வேண்டும் என டொக்டர் ருவான் சில்வா தெரிவித்துள்ளார்.

36 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பமா? நாசாவின் அதிர்ச்சி தகவல்
 
கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும்போது, கடந்த பெப்ரவரி மாதம்தான் அதிகளவு வெப்பம் பதிவாகியுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும்போது கடந்த மாதம்தான் அதிகளவு வெப்பம் பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜனவரி மாதத்தில் வழக்கத்தைவிட 1.14 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவானதாகவும், அது பிப்ரவரி மாதத்தில் 1.35 டிகிரி செல்சியசாக அதிகரித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும் போது, பெப்ரவரி மாதத்தில் பதிவானது அதிகளவு வெப்பநிலை என நாசா தெரிவித்துள்ளது.

மனிதர்களால் வெளியான அசுத்த வாயுக்களால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, புவியில் வெப்பம் அதிகரித்ததாகவும், எல்நினோ காரணமாக இந்த பருவநிலை மாறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

1880-ம் ஆண்டு முதல் உலக அளவிலான வெப்ப நிலை மாற்றம், மழை அளவு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



மனிதர்களால் வெளியான அசுத்தமான வாயுக்களால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, புவியில் வெப்பம் அதிகரித்ததாகவும், எல்நினோ காரணமாக இந்த பருவநிலை மாற்றம் ஏற்பட்டதாகவும் மேலும் கூறப்படுகிறது.


கொழும்பில் வரலாறு காணாத வெப்பம்! உடல் உள்ளுறுப்புகளை பாதிக்கும்! கர்ப்பிணிகளுக்கும் எச்சரிக்கை... Reviewed by Author on March 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.