அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இணையத்தின் விம்பம் ஊடாக தேசிய உதைபந்தாட்ட பயிற்சியாளரும் சிறந்தபயிற்றுவிப்பாளருக்கான ஆளுநர் விருது பெற்ற ஜனாப் ரெட்ணம் முகம்மது ஜஸ்மின் அவர்களின் அகத்தில் இருந்து..


கலைஞனின் அகம் கணனியில் முகம் பகுதியில் விம்பம் ஊடாக தேசிய உதைபந்தாட்ட பயிற்சியாளரும் சிறந்தபயிற்றுவிப்பாளருக்கான ஆளுநர் விருது பெற்ற  உதைபந்தாட்டத்தில் 'யு' லைசன்ஸ் பெற்ற வடகிழக்கு மாகாணத்தில் இருவரில் ஒருவர் விளையாட்டு அமைச்சின் மன்னார் மாவட்டத்திற்கான  விளையாட்டு இணைப்பதிகாரியுமான ஜனாப் ரெட்ணம் முகம்மது  ஜஸ்மின் அவர்களின் அகத்தில் இருந்து......

தங்களைப்பற்றி?

எனது செந்த இடம் உப்புக்குளம் எனது கல்வியை மன்-அல்-அஷ்ஹர் மகாவித்தியாலயத்தில் கற்றேன் 1977-1990 வரையான காலப்பகுதியாகும் பின்பு யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து புத்தளம்-ஹம்பாந்தோட்ட மினுவங்கொட பல இடங்களில வசித்தோன் இளமைக்காலம் உருண்டோடியது.

ஒரு விளையாட்டு வீரனாக வரவேண்டும் என்ற எண்ணம் எப்போது உருவானது?

எனது குடும்பம் தான் காரணம் எனது அப்பா முகமட் அப்துல் காதர் முகமட் ரட்ணம் ஒரு சிறந்த விளையாட்டு வீரர் 1977ம்ஆண்டு மன்னார் மாவட்டத்தின் வொலிபோல் கப்படன் இருந்து 1977 சுகதாஸ விளையாட்டரங்கில் வடமாகாண அணியை பிரதிநிதிப்படுத்தி கிண்ணத்தினை பெற்றார.; அவர்தான் என்னை விளையாட்டில் ஈடுபட வைத்தார் தான் எங்கு (ஏழடடநல டியடட்-கரப்பந்து) விளையாடப்போகின்றாரோ அங்கு என்னையும் அழைத்துச்செல்வார் அந்த ஊக்குவிப்புத்தான் எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமானதிற்கு காரணம் என்பேன்

முதலாவது விளையாட்டு வீரனாக மைதானத்தில் நீங்கள்?

பாhடசாலைக்காலத்தில் பாடசாலை மைதானத்தில் தான் எனது விளயாட்டு ஆரம்பமானது.

13வயது அணியினரை தேர்வு செய்யும் போது அங்கு வந்த பயிற்றுவிப்பாளர்

சாமின் மாஸ்ரர் என்னை 13 வயதிலே அடையாளப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து

15 வயது அணியிணர் பாடசாலை மட்டத்தில் விளையாடும் போது புனித சவேரியார்

ஆண்கள் கல்லூரிதான் மிகவும் திறமையான வீரர்களை கொண்ட அணியாக இருந்தது.

அப்போதுதான் 1984-1985 காலப்பகுதியில் முதலாவதாக போட்டியில்

போராடி தோற்றோம்....

முதலாவது போட்டியே தோல்வி எனும் போது மனநிலை எப்படி இருந்தது?

என்னைப்பொறுத்த மட்டில் தோல்வியானது பெரியதொரு உந்துசக்தியை தந்தது யார் என்ன சொன்னாலும் உதைபந்தாட்டம் எனும் போது புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி என்பது சவாலான தொரு அணி அப்போதே எனக்கொரு ஆர்வம் இருந்தது

எச்சந்தர்பத்திலாவது ஒருமுறையேனும் புனித சவேரியார் அணியினை வெல்ல வேண்டும் என்ற ஆர்வம் என்னை உசுப்பியது அதை நான் 3 வருடத்தின் பின் நிறைவேற்றினேன். 17 வயது அணிக்கு அல்-அஷ்ஹர் பாடசாலை நான் கப்டனாக இருந்து பாடசாலை மாவட்டம் ரீதியில் வெற்றியீட்டினேன் நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் எங்களை போட்டித்தன்மையுடன் வெல்ல வைத்ததது புனித சவேரியார் ஆண்கள் கல்லூரிதான் உதைபந்தாட்டம் சிறந்த அணி..


உதைபந்தாட்டம் உங்களது எண்ணம் எவ்வாறு விரிவடைந்தது?


1989 சம்பியன் உதைபந்தாட்டம் தவிர எல்லே வொலிபோல் கரப்பந்து கைஜம்
போன்ற வற்றில் தொடர் சம்பியன் ஆகத்தான் வருவேன் அது போன்றுதான்படிப்பிலும் காரணம் எனது பயிற்றுவிப்பாளர் பெற்றோர் சூழல் ஆசிரியர்கள் நண்பர்கள் என அனைவரும் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள் இருந்தும்வருகின்றார்கள் 17 வயதில் இருந்தே கிளப்பிற்காக விளையாடி
வருகின்றேன்.

1989ம் ஆண்டு தேசிய ரீதியில் 20 வயது அணிசார்பாக மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியும் அல்/அஷ்ஹர் கல்லூரியும் இணைந்து தலைவராக புவிந்திரன்  ஜீவரெட்ணம் மாஸ்ரர் தலைமையில் சென்று விளையாடினோம் செமிபைனல் மட்டும் போனோம் பதுளை உதைபந்தாட்ட அணியோடு பெனால்ட்டியில் 1-1என்று தோற்றோம் அந்த ஒரு பெனால்ட்டி கோலையும் நான்தான் அடித்தேன் இன்னும் மறக்கமுடியாது விடையமாகவே உள்ளது அந்த விளையாட்டுக்கு பின் எங்கள் 06  புவிந்திரன்- ஜஸ்மின்-லரிப்-றைசியஸ்-சுதர்சன்-பதுதீன்-வீரர்களை தேசிய சிறந்த வீரர்கள் என்று அழைத்தார்கள் பயிற்சிக்கும் அழத்தார்கள் பின் தேசிய அணியில் இணைத்துக்கொள்வதாகவும் சொன்னார்கள் அப்போதைய யுத்தம் எங்களை செல்ல அனுமதிக்கவில்லை எங்களது திறமை அப்படியே மழுங்கடிக்கப்பட்டது.

பயிற்றுவிப்பாளராக முதற்கட்டபயிற்சியை பெற்று சிறந்ததொரு பயிற்சியாளராக நிலை நிறுத்திய விடையம்?

1990 இற்கு பின் யுத்த இடம்பெயர்வுக்கு மன்னாரில் நான் இல்லை மினுவங்கொடை ரூயஸ் அணியிலும் பாணாந்துறை கெட்ட திகாரி அணியிலும் களுத்துறை 3ஸ்ரார் கழகங்களுடன் விளையாடக்கிடைத்தது எனது வாழ்வில் அரிய வாய்ப்பு என்பேன் ஏன் எனில் பல தேசிய பயிற்சிவிப்பாளர்களை காணவும் பழகவும் சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்தது.  அதனால் எனக்குள் நானும் சிறந்ததொரு பயிற்றுவிப்பாளராக வரவேண்டும் என்ற எண்ணம் விரிவடைந்து சென்றது எனலாம் அச்சந்தர்பத்தில் தான் ஹம்பாந்தோட்ட தேசிய பயிற்றுவிப்பாளர் எட்வெட் ஜெயலக்தின என்னிடம் வினாவினார் நீர் மேல்மாகாணத்தை சேர்ந்தவரா இல்லை என்றேன் அப்போது  எந்த பயிற்றுவிப்பாளரிடம் இவ்வளவு காலம் பயிற்சி பெற்றனீர் என்று கேட்டடார் நான் ஜீவரெட்ணம் மாஸ்ரர் என்றேன் அவர்  வியந்து போனார் மகத்தான பயிற்றுவிப்பாளரிடம் பயிற்சி பெற்றுள்ளீர்

உமது எதிர்காலம் சிறப்பாக அமையும் என்றார் அந்தளவிற்கு எமது மாஸ்ரர்
சிறப்பானவர் அப்போது உணர்ந்தேன் எனது மாஸ்ரரைப்போல நானும் சிறந்த
பயிற்றுவிப்பாளராக வரவேண்டும் என்று அதற்காக இன்னும் முயன்று
வருகின்றேன்.

இலங்கையில் மன்னார் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகவுள்து இருப்பினும் உதைபந்தாட்டம்;தான் மன்னாரை அடையாளப்படுத்தும் மாண்புமிகு முதலமைச்சர் மன்னார் உள்ளகவிளையாட்டரங்கை திறந்து வைத்து பேசும் போது சொன்னார்....

மாண்புமிகு முதலமைச்சர் சென்ன விடையம் உண்மைதான் மன்னாரின் அடையாளமே  உதைபந்தாட்டம்தான் அன்றும் இன்றும் என்றும் என்பது எனது கருத்து.

விளையாட்டுத்துறையில் பல சாதனைகள் நிலைநாட்டியுள்ளது. நான் தேசிய வீரர் அல்ல ஆனால் தேசிய பயிற்றுவிப்பாளராக இருக்கிறேன் பல கருத்தரங்குகளுக்கு வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறேன் அங்கு நான் கண்டு உணர்ந்து கொண்ட விடையம் அவர்களோடு ஒப்பீடு செய்து பார்க்கும் போது மொழிப்பிரச்சினை உள்ளது.

உண்மைதான் மற்றப்படி தன்னம்பிக்கை ஆளுமை திறமை தைரியம் அவர்களைவிட ஒரு படி மேல் தான் உள்ளோம் அது எங்கள் மன்னார் மண்ணின் வாசமும் பற்றும் தான்    
ஆனால் அவர்கள் பணத்தாலும் நவீனத்தாலும் உயர்த்திக்காட்டிக்கொள்கிறார்கள் அவ்வளவுதான்.

ஒரு விளையாட்டு வீரனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் எவை?

ஆர்வம் இருந்தால் விளையாடலாம் என்பது பலரின் கருத்து... என்னைப்பொறுத்த மட்டில் ஆர்வத்தை விட உதைபந்தாட்டத்தில் விருப்பமும் உடல் தகுதி அவனது சூழல்-விவேகம் விளையாட்டுபற்றிய தெளிவு மண்பற்றும் இருக்க வேண்டும் மிகுந்த ஆர்வம் இருந்தும் பிரியோசனம் இல்லை அவன் தெரிவு செய்யும் துறையில் அவனுக்கு ஆளுமையும் உடல் தகுதியும் இல்லாது இருக்கும் பட்சத்தில் பயனில்லை...

மன்னார் மண்ணில் உங்களைக்கவர்ந்த விளையாட்டு வீரர்கள் பற்றி?

உதைபந்தாட்டம் என்றாலே மன்னாரின் அடையாளம் என்று சொல்லுமளவிற்கு இருக்கும் போது எத்தனை வீரர்கள் இருந்து இருப்பார்கள் அவர்களில் எனது நினைவில் நிற்பவர்களும் கவர்ந்தவர்களும் எனும் போது

சிரேஸ்ர வீரர்களாக----

அன்ரன் பிகிராடோ-பள்ளிமுனை

செபமாலை     -அடம்பன்

எனது காலத்தில் ஜேசப்-தவராசா-மைக்கல்

இவர்களோடு

டீக்கோனி-முஜிப்-டிக்மல்-பிராங்ளின்-ஜெராட்-அன்ரன்-அனஸ்லின்-ஹில்லறி-

ராஜி-றெமி-

தற்போது இளம் வீரர்களாக....

ஏடிசன்-கொட்வின்-ரஞ்சா போன்ற மிக்க திறமையான பல வீரர்கள் உள்ளனர்

எனது பயிற்சியில் இருந்து இதுவரை 300ற்கும் மேற்பட் வீரர்கள்

வெளியேறியுள்ளனர் ஒவ்வொருவரும் சிறந்த வீரர்கள் தான்.

நீங்கள் கவலை கொண்ட விடையம் பற்றி?

நல்லதொரு கேள்வி என்னை மிகவும் கவலை கொள்ளச்செய்த விடையம் என்றால் நான் எனது நேரத்தினை பெரும்பாலும் நகரப்பகுதி வீரர்களுடனேயே செலவழித்துள்ளேன் கிராமப்புறத்திளுள்ள வீரர்களை நான் எனது பயிற்சிக்குள் உள்வாங்க வில்லை அதற்கான கால அவகாசம் கிடைக்கவில்லை அது எனக்கு மிகவம் கவலையான விடையம் தான். கிராமத்திலும் திறமையான வீரர்கள் உள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டு 2004ம் ஆண்டு தமிழ்தேசிய விளையாட்டுப்போட்டியில் சம்பியன் ஆனது கிராமப்புற வீரர்களது கோளினால் தான் என்பதை இங்கே சுட்டிக்காட்டவேண்டும். இரவுப்பயிற்சியும் வீரர்களின் திறமையும் தான் விக்ரர் கிண்ணத்தினையும் சுவீகரித்துள்ளது.

 விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு அன்றும் இன்றும் எப்படி உள்ளது?

மன்னார் உதைபந்தாட்ட வீரர்களினது இடைவிடாத முயற்சியும் பயிற்சியும் தான் மன்னார் மண்ணின் பெருமையை நிலைநிறுத்தியது சிலரின் கருத்து ஒரு சில வீரர்கள் ஒழுக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்று பெரும்பாலும் வீரர்கள் கடற்றொழிலோடு தொடர்புடையவர்கள் ஆதலால் அவர்கள் சில நேரங்களில் புகைத்தல் மதுபாணம் அருந்துதல் ஈடுபடலாம் அதையே பெரிய ஒழுக்கம் கெட்ட செயலாக சுட்டிக்காட்டுவதில் என்ன உள்ளது மைதானத்தில் எந்தக்காரணம் கொண்டும் வீரர்கள் மன்னார் மண் தோற்பதை விரும்பமாட்டார்கள் விளையாட்டு வீரர்கள் ஒன்றினைந்து வெற்றிக்காக போராடுவார்க்ள அதைத்தான் நான் அவர்களிடம் எதிர்பார்ப்பேன் அதைவிட்டு அவர்களிடம் இருக்கும் சின்ன சின்ன விடையங்களை சுட்டிக்காட்டுவேன் பெரிது படுத்த மாட்னே; தேவையும் இல்லை.

மன்னார் மாவட்டத்தின் விளையாட்டு அமைச்சின் இணைப்பதிகாரி என்றமுறையில் தங்களின் செயற்பாடுகள் திட்டங்கள் பற்றி?

எமது மன்னார் மாவட்டத்தில் விளையாட்டுக்கான பயிற்சிக்கல்லூரி ஒன்றை அமைக்கவேண்டும் என்பது எனது கடமையும் கனவும் தான் உதைபந்தாட்டத்தில் பல வெற்றிகளை ஈட்டியுள்ளோம் ஆனால் ஏனைய விளையாட்டுக்களின்  வெற்றி கிட்டவில்லை காரணம் அந்ந விளையாட்டுக்களில் வீரர்களுக்கு ஆர்வமின்மையும் அதனோடு இணைந்த அதிகாரிகளுக்கும் மாவட்டத்தில் சரியான கட்டமைப்பும் நிர்வாகமும் உருவாக்கப்படவில்லை இருக்கின்ற அமைப்புகளும் செயற்பாடு குறைவு என்பேன் தேசிய ரீதியிலும் இதுதான் பிரச்சினை என்பேன் வடக்கு மாகாணத்திலே எல்லா விளையாட்டுக்கழகங்களும் விளையாட்டு அமைப்புக்களும் ஒன்றினைந்து ஒரு கழகமாக இயங்கமுடியம் பாராளுமன்ற விளையாட்டு நிர்வாக 3;1 சட்டத்தின்படி அனைத்தும் ஒரு கொமிட்டியாக இயங்கலாம் உருவாக்கலாம் ஆனால் அது இன்னும் நடைபெறாமல் உள்ளது கவலைதான்.

வடக்கு மாகாணத்திலே உள்ளகவிளையாட்டரங்கு பெரிதாக இருப்பது மன்னார் மாவட்டத்தில் தான் இருக்கின்றது அதேவேளை விளையாட்டுக்கள் பயிற்சிகள் நடைபெறுவதில்லை அதற்கான சிறந்த பயிற்சியாளர்களும் இல்லை இது பற்றி?

கௌரவ ஆளுநர் சந்திரசிறி அவர்களால் தான் இவ்வரங்கு இங்கு உதயமானது. இந்த உள்ளக விளையாட்டரங்கு இன்னும் முழுமையாக பூர்த்தியாகவில்லை அதே நேரம் மன்னார் நகர சபையிடமும் ஒப்படைக்கப்படவில்லை மன்னார் மாவட்டத்திலும் மகாணத்திலும் 08 விளையாட்டு அதிகாரிகள் உள்ளனர் கரப்பந்து,வலைப்பந்து,கூடைப்பந்து,கபடி,மேசைப்பந்து

பயிற்றுவிப்பாளர்கள் இல்லை குறிப்பாக கபடிக்கென்று பயிற்றுவிப்பாளர்களும் இல்லை காரணம் அதற்கான சிறந்த அங்கீகாரம் பெற்றவர்களாயினும் இல்லை ஒரு பிரிவில் 45 பாடசாலைகள் இருக்கின்றது 45 பாடசாலைக்கும் விளையாட்டு ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் அவர்களின் தனித்திறமையினை வெளிப்படுத்தி தனது பாடசாலை அந்தந்த விளையாட்டுக்களில் மாவட்டத்தில் வெற்றி பெறுவதற்கான பங்களிப்பினை செய்ய வேண்டும் அதற்கு வலையக்கல்விப்பணிமனையும் தனது செயற்பாட்டை விஸ்தரிக்கவேண்டும்

மன்னாரைப்பொறுத்தவரையில் உதைபந்தாட்டம் மட்டும் தான் விளையாட்டாக குறுகிய எண்ணத்தில் உள்ளார்கள் ஆனால் ஏனைய விளையாட்டுக்கள் பிரகாசிக்க தவறிவிடுகின்றது இதற்கான தீர்வு பற்றி?

முதலாவதாக மாவட்டமும் விளையாட்டு அமைச்சும் வலையக்கல்விப்பணிமனையும் இணைந்து விளையாட்டு ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி நெறியினை பெற்றுக்கொள்வதற்கான புலமைப்பரிசில்களை வழங்கி ஊக்கமளிக்க வேண்டும் பயிற்றுவிக்கப்படவேண்டும் படிக்கவேண்டும் நானும் அதிகமான விளையாட்டு சம்மந்தமாக நுணுக்கங்களை கற்றுக்கொள்கிறேன் கருத்தரங்கில் கலந்து கொள்வதாலும்புலமைப்பரிசில் பெற்று மேலதிகமாக விளையாட்டு கற்றுக்கொள்வதாலும்பயனடையமுடியும் என்கிறேன்.

விளையாட்டு அதிகாரியாக இருக்கும் தங்களால் ஏன் இப்படியான கருத்தரங்குகளை நடத்தி தரமான திறமையானவர்களை இனங்கான முடியாதா?

அருமையான கேள்வி---- நான் விளையாட்டு அதிகாரியாக(S.O) இருந்த காலத்திலே நான் பயிற்சியாளர் பயிற்சிகளை நிறையவே செய்துள்ளேன். உதைபந்து கரப்பந்து வலைப்பந்து போன்றவை பயிற்சியளிக்கும் பின்பு நான்
அமைச்சுக்குள் விளையாட்டு அதிகாரியாக போனபின்பும் 2013-2014 வருடங்கள்
பயிற்சியளித்தேன் ஆசிரியர்களுக்கு அப்போது நான் கவனித்தேன் சில ஆசிரியர்கள் பொழுது போக்காக ஏனோதானே என்றுதான் பயிற்சியில் கலந்து கொண்டதைப்பார்க்கும் போது  எனக்கு மிகவும் கவலையாக இருந்தது அதே போல இந்த வருடமும் ஒவ்வொரு பிரதேச செயலகத்தில் இருந்தது 05 ஆசிரியர்கள் கேட்டிருந்தேன் மடுப்பிரதேசத்தினைத்தவிர மற்ற பிரதேசங்கள்  இன்னும் எந்தப்பதிவும் இல்லை ஆசிரியர்கள் பெயரும் தரவில்லை என்பது கவலையான விடையம் தானே

மன்னார் மாவட்டத்தினை பொறுத்தவரையில் எல்லா விளையாட்டு வீரர்களையும் ஒருங்கினைக்கும் விதமாக விளையாட்டுப்போட்டிகள் வைத்து கௌரவப்படுத்த முடியாதா?

2007 விஸ்வலிங்கம் ஜயா இருந்த போது 2000-2007 ஆண்டுக்கான வீரர்கள் 50 பேரைக்கௌரவப்படுத்தினார்கள் அற்கு பிறகு இன்று வரை யாருமே எந்த வீரருமே பயிற்சியாளர்களோ விளையாட்டுக்கழகங்களோ கௌரவிக்கப்படவில்லை என்பது பெரும் கவலைக்குரிய விடையம் எங்களை எங்கள் மாவட்டமே கண்டு கொள்ளவில்லை எனும்போது வேறு யார் கண்டு கொள்ளப்போகிறார்கள்  நான் 2015 மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற கபடிப்போட்டியில் கிரிடா சக்தியில் வெற்றி பெற்றுக்கொண்டவர்களுக்கான கபடி-கொக்கி-நெஸ்னல் கிரிடா சக்தியின் மூலம் உயர் அதிகாரிகளுடன் கதைத்து 100 வீரர்களை கௌரவப்படுத்தினேன் மன்னார் மாவட்டத்திற்கு தனியாக என்னால் செய்ய முடியாது போனதற்கு காரணம் பலரின் அனுமதியினைப் பெறவேண்டும் மன்னார் மாவட்டத்தினைப் பொறுத்தமட்டடில் அது உடனே சாத்தியப்படாது ஏன் எனில் மன்னார் மாவட்டத்திற்குள் பல முரண்பாடுகள் உள்ளது அதை நான் உற்பட எல்லா அதிகாரிகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே தான் முடியும்.

நீங்கள் தேசிய பயிற்சியாளராக சாதித்துள்ளீர்களா?

இல்லை இல்லை இன்னும் சாதிக்க நிறையவுள்ளது என்னுடைய கனவு எப்படியென்றாலும் FIA உதைபந்தாட்ட சம்மேளனத்திற்குள் போக வேண்டும் குறைந்தது நான் விரிவுரையாளராகவாவது இருக்கவேண்டும் என்பதுதான் எனது முதன்மையான கனவு அதற்காக என்னை எல்லாவழிகளிலும் தயார்படுத்தி வருகின்றேன் அதற்கான நாள் வரும்வரை எனது முயற்சியும் பயிற்சியும் தொடரும்...

இலங்கையில் இருந்து பல தடவைகள் பயிற்சிக்காகவும் பயிற்றுவிப்பாளராகவும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளீர்கள் மொழிப்பிரச்சினை அந்த அனுபவம் பற்றி?

அருமையான கேள்வி மொழிப்பிரச்சினை என்பது பெரும்பிரச்சினை இல்லை ஆனால் எமது திறமையினை முழுமையாக வெளிப்படுத்த மொழியானது மிகவும் அவசியமாகின்றது என்னைப்பொறுத்தவரையில் நான் சிறிய வயதிலே சிங்கள மொழியினை கற்றிருந்தேன் அத்தோடு 1990 இடப்பெயர்வு சிங்கள மொழியினை கற்க இலகுவாக இருந்தது எனது அதிஷ்டமே...

ஒரு முறை ஜேர்மன் நாட்டில் பயிற்சி வகுப்பில் கண்ணீர் விட்டு அழுதேன் டச்மொழியில் தான் பயிற்சி வகுப்பு நடக்கும் அப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்வார்கள் அந்த மொழிபெயர்பாளரின் வேகத்திற்கு ஈடுகொடுத்து கிரகிக்க முடியவில்லை அப்போது ஒரு கேள்வி என்னிடம் கேட்டார்கள் என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை அந்தளவிற்கு வேகமும் விவேகமும் செயற்படவில்லை சரிபிழைபார்க்கும் போது மிகவும் சிறிய கேள்வி தான் அதற்கு எனக்கு விடைதெரியும் ஆனால் என்னால் சொல்லமுடியாமல் போனதால் ஓவென கண்ணீர் சிந்தி அழுதுவிட்டேன் 07 நாள் நடந்த பயிற்சியில் முழுக்கவனத்தினை செலுத்தி எப்படியாவது கூடிய புள்ளிகள் பெற வேண்டும் என்ற இலக்குடன் ஓய்வின்றி பயிற்சி செய்தேன் எனது வைராக்கியம் என்னை 2ம் இடத்திற்கு கொண்டுவந்தது பரீட்சையில் சித்தியடைந்தேன் முடியும் என்று நினைத்து முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதை அன்று உணர்ந்தேன்  திறமை இருந்தால்  எங்கும் சாதிக்கலாம்.

அதுபோல கொழும்பில் என்னோடு பணியாற்றுபவர்கள் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் எல்லாமே பெரும்பாலும் சிங்களவர்கள் தான் என்னோடு எந்த விதமான பாகு பாடு காட்டுவதில்லை தமிழன் வடக்கு மாகாணத்தைச்சேர்ந்தவன் என்று நினைப்பதில்லை சகோதரர்களாகத்தான் நடத்துவார்கள் பழகுவார்கள் உதவியும் செய்வார்கள்.


உங்களது இந்த வளர்ச்சிக்கு துணையாக நின்றவர்கள் என்றால்?

என்னுடைய பெற்றோர் அதனைத்தொடர்ந்து பயிற்றுவிப்பாளர் ஜீவரெட்ணம் மாஸ்ரர் அத்தோடு எல்லாவற்றுக்கும் மேலாக என்னுடைய ஜென்னத்தும்மா மனைவியை சொல்ல வேண்டும் கல்யாணம் முடிந்து குழந்தை கிடைக்க இருந்த நேரமும் பயிற்சிக்காக வெளியாட்டில்தான் இருந்தேன் இப்பவும் அப்படித்தான் நான் பெரும்பாலும் வருடத்தில் 03 மாதங்கள்தான்  குடும்பத்தோடு இருப்பேன் மிகுதி நேரமெல்லாம்

உதைபந்தாட்டம் தொடர்பான பயிற்சிகள் கருத்தரங்குகள் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வேன்  அந்தவகையில் மனைவி மற்றும் சகோதரர்கள் நண்பர்கள் அயலவர்கள் கழகங்கள் எல்லாமே எனக்கு பெரும் உதவியாகத்தான் உள்ளார்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் வடக்கு மாகாணத்திலே என்னை பயிற்றுவிப்பாளராக அறிமுகப்படுத்தியவர் மறைந்த அதிகாரி றொகான் ராஜசிங்கம் அவர்களை என்வாழ்நாளில் மறக்க முடியாதவர் என்பேன் 2000-2006 வரை என்னை உதவி பயிற்றுநராக நியமித்தவர் இவர்தான்.

2007 ல் விமல்ராஜ் அவர்களும் எனக்கு உதவி புரிந்தார் அன்றும் இன்றும் எனக்கு பலர் ஆதரவாக உள்ளார்கள் நான் அதிஸ்ரக்காரன்தான் ஏன் எனில் எனக்கு எல்லாமே நல்லவையாகவே அமைந்தத என்பேன்

மன்னார் இளைஞர் யுவதிகளுக்கு விளையாட்டு அதிகாரியாக தங்களின் கருத்து?

மன்னாரின் அடையாளம் விளையாட்டுத்தான் அதுவும் உதைபந்தாட்டம் தான் அதிலும் மன்னாருக்கு பெருமை சேர்ப்பதில் ஒழுக்கத்திலும் சரி விளையாட்டிலும் சரி உங்களின் திறமையோடு ஆளுமை அர்ப்பணிப்பு விடாமுயற்சி இடைவிடாத பயிற்சியோடு செயற்பட்டால் உங்களுக்கும் வெற்றி உங்களால் மன்னார் மாவட்டத்திற்கும் வெற்றி நீங்கள் உண்ணும் உணவு உடுத்தும் உடை உயிர்வாழ வைப்பது எல்லாமே இந்த மன்னார் மண்தான் ஆதலால் நீங்கள் மன்னார் மண்ணின் பெருமை பேசுகின்றவர்களாக இருப்பதே மன்னார் மண்ணிற்கு அடையாளமும் செய்யும்பாரிய பணியுமாகும்.

மன்னார் விளையாட்டில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதே அதற்கான காரணம் பற்றி?

கடந்த 03 வருடங்களாக மன்னார் விளையாட்டிலும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. அதற்கு காரணம் நான் உற்பட மன்னாரில் உள்ள கழகங்கள் விளையாட்டு வீரர்கள் விளையாட்டு அதிகாரிகள் என்பவர்களுக்கிடையில் முரண்பாடுகள் கருத்துவேறுபாடுகள் பிழவுகள் புரிந்துணர்வின்மை போன்ற காரணங்களினால்தான் இந்த மந்த நிலை உள்ளது இந்த நிலையை அகற்ற வேண்டுமானால் முன்னைய காலங்களில் எவ்வாறு மன்னார் மக்கள் ஜக்கியமாக ஒற்றுமையாக மன்னார் என்ற ஒரே சிந்தனையோடு செயற்பட்டார்களோ அதே சிந்தனை உணர்வு ஒவ்வொருவரினதும் மனதில் வரவேண்டும்.

மன்னாரில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் நான் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்வது விளையாட்டுத்துறைக்குள் எந்தக்காரணம் கொண்டும் அரசியல்-சமயம்-சாதி-மொழி-இனம்-பாகுபாடுகளை உட்புகுத்தி பிளவுகளை ஏற்படுத்த வேண்டாம் எல்லோரும் ஒன்றினைவோம் மன்னாரை முன்னிலைப்படுத்துவோம் தவற விடும் பட்சத்தில் மன்னாரின் அடையாளமே இல்லாமல் போய்விடும் இச்சந்தர்ப்பத்தில் ஓரணியில் இணைவோம்.

உதைபந்தாட்டத்தினைப்பொறுத்தமட்டில A.B.C என்ற லைசன் உள்ளது பற்றி?

'யு'-லைசன் உள்ளவர்கள் 02 பேர்தான் நானும் குருநாகல் வடிவேல் சுரேஸ்தான்

உள்ளோம்  மன்னாரில் இருந்து நானும் ரீ-ஞனராஜ்  பாகிஸ்தான் பூட்டான் நேபாளம் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து 08 பேர் பரீட்சையும் பயிற்சியும் பெற்றோம் இரண்டு பிரிவிலும் சித்தியடைய வேண்டும் எல்லாரும் நன்றாகத்தான் எழுதினார்கள் எனக்கு அதிஷ்ரம் என்று தான் சொல்ல வேண்டும் முழுமையான திறமையினை வெளிப்படுத்தி சித்தியடைந்து விட்டேன்.

தங்களது உதைபந்தட்டத்தின் சாதித்த விடையங்கள் பற்றி?

To Further My Football career as a Coach of AFC ‘A’ Licence ,Where I can assume a role in

providing my knowledge and expertise in sports club and school teams in help achieve

And mission using my diverse and expert skills. I  Started my coaching career in 1996 and still

doing.

Specially Ministry of sports had Appointed national head coach of  National squad kreeda

shakthy from 2011. Now I am working National Women team Head Coach.

Working Experience

 As a School Coach – Puttalam / Al . Aksa N.S -1996 - 1999

 As a Sports Officer – Department of Sports, Northern Province , ( 2000-2010).

 As a Assistant  Coach – North East   Provincial  Team ( 2001 -2005).

 As  a Coach – District Football League (2001 – 2013 )

 As a Coach – District Football Team (2001 – 2013 )

 As a Coach - , Northern  Province Team ( 2007 -2013).

 As a District Sports Co –Ordinating Officer ,  Ministry Of Sports (2013 to still).

 As a Visiting Lecturer (Football)in  National Institute Of Sports Science – Sri-Lanka.(From

2009 )

 As a Assistant Instructor and Course Co-ordinator of Asian Football Confederation  

Coaching Course – 2006, 2009

 As a Instructor of Coaches Course in Western Provincial Council Institute Of Sports

Science-     Colombo

 As a member of Technical Committee of Football federation 2009 – 2011 period.

 Educational Qualification

Successfully   Pass

- G.C.E (O/L)

- G.C.E.(A/L)  

 Professional Qualification

  Inter National Diploma in Coaching (Football) –  Hungary  – 2015.

 Inter National Diploma in Coaching (Football) - Germany – 2010.

 Diploma in Sports Science ( NISS ,Sri Lanka  )-  2002 – 2003

 Asian Football Confederation ‘A’ Licence Coach - 2009

 Strength and Conditioning   Course – SAI, Bangalore  India (2014)

 Special Coaches Course of Athletic - SAI, Trivandrum ,India (2007)

 Short Courses

Yoga &  Relaxation Technique –

(Pandit  G.P.Wicramarachchi Memorial International Research Symposium)Sri Lanka.

leader Ship & Team Work –Sri Lanka – German Development Co-orpration

 Coaching Experience

 As a Coach

 Solid S.C – (Anurathapure )

 Sri Lanka No 1 Tournament of   Dialog Champion League, FFSL - Champion - 2014

 International Club cup Tournament  - 2015 , Bangladesh

 (Best Team  of  tournament and 1st inter National Won again India

 South Asia  Came 2016  Women Volley Ball National Team-Coach

Northern Provincial Team (Men)

 -National Sports Festival –Runner Up  2009 , 2012

 National Sports Festival –2nd Runner Up  2001,2002, 2005 , 2011,2013

 National Sports Festival – Best Team 2010

District Coach (Men )

 Work with Various Team - 2000- 2013.

 National Youth Festival – Champion – 2008

 Inter  Senior League Runner Up – 2009

 Provincial Tournament ,NEP & Northern , - Champion –2001 – 2004, 2007 – 2013

 Provincial Tournament (Women ) – Northern – Champion – 2005 , 2009, 2011, 2012

 First women team organized in North East in 2002.

 Pt  /Al.Aqsa N.S – Kalpitiya

 School   Provincial Champion – 1996 ( Boys)

Head Coach (Women ) –  National Training Squad of National KreedaShakthy ,

 Ministry of Sports,  2011 T0 2014 ( Long Term Development Project )

Head  National Coach – South Asian Games Sri Lanka women football Team for 2016

Playing Experience  School Level ----

 Mn/AL.Azhar M.V – From Under 13 Football and other Game

 District School Football Champion – 1988 to 1990(First time won St.Xaviours

mmv)

 District Athletic Champion – 1988 ( 400M , 800 M , High jump)

 School National Participated – 1987 (As A Captain Under 17 Volleyball

Team )

 School National Participated – 1988, 1989(As a Captain Under 19

Football Team)

 School National Participated – 1988, (Under 19 Elle Team).



                     

  Playing Experience  Club level

 From 1986 – 1990 starting to play my club Al fatha S.C .( Most Time come to the final in district wise  )

 From  1991- 1995 express S.C Minuwangoda (Participated Division ii and FA CUP Tournament )

 From 1996 – 1999 Pearls S.C Kalpitiya (Won Puttalam league Cups and Participated Division ii and FA CUP

tournament)

 Contract Play with Kaluthara Green Hotel Team and Panathura Thottawattha Club.

 Invitation Tournaments – 7 A Side  All Island Modara Club  Tournament .(1994 ).

Playing Experience  National level

 AS A CAPTAIN Under 19 school national matches – 1988,1989

 As a Vice Captain District under 21 team for football federation

tournament -1989

 As A Member District Team 1990 .


MY GUIDE’S

 First My Father ( M.ACM.Ratnam ) District Volleyball Player and captain Young Star Club

uppukulam.His Team Represent for Mannar  in 1977 Sugadathsa Cup , Colombo.

 My School Teachers – Mr. Kamil Sir, Mr . Wadood Sir, Mr. Perinbanayagam Sir, and Late

Mr.Seinullah Sir.

 My Coach – Mr.M.Jeevaratnam – Former DSO, AL-FATHA S.C Seniour Players.

 MY Teacher . Mr.N.K.ABEYSINGHE (asst .Director of Sports,) Mr.P.D Srisena ( Technical

Director ,FFSL)

              Mr. Sajith jayalal – Director , National institute of Sports, Late Rohan Raja Singam (DSO)

 Motivators  - Mrs.Stanly de mel ( Addl G.A) , Mr& Mrs . S.Kethiswaran ( D.S.Musali ),

Mr.Wimalrajan AND Raja Ranasinghe (AD SPORTS , North) , Mr. MYS.DESHPRIYA

Government AGENT , MANNAR.Mr.Rohan Raja singam – formor

 Mr. P.Sagara piyathilaka – solid s.c Anuradhapura and our Football federation president          

Anurade silva and Ranjith Rodrigo and Secretary Balendiran Antony

Language and Computer Skill

Successfully   Completed Diploma in English – Ministry Of Education

Successfully   Completed Diploma in Computer –  TEC, Nawala, Sri Lanka.

இதுவரை உங்களை எந்த அமைப்போ.... நிறுவனமோ.... அரசோ கௌரவப்படுத்த வில்லையா?

ஒரு முறை வடக்குமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் சிறந்த பயிற்றுவிப்பாளருக்கான ஆளுநர் விருது தந்து பாராட்டினார்கள் எனது
தரத்திற்கும் திறமைக்கும் முழுமையானதொரு கௌரவம் இன்னும் கிடைக்கவில்லை சந்தர்ப்பமும் அமையவில்லை கடந்த ஆண்டில் எனது பயிற்சியின் கீழ் பயிற்சி பெற்று சர்வதேச ரீதியில் வெண்கலம் மற்றும் சிறந்த வீரர் விருது பெற்றவர்களுக்கு விளையாடிய வீரர்களை      வடக்குமாகாண விளையாட்டு அமைச்சினால்விருது வழங்கி கௌரவிக்கப்ட்டது. அப்போது என்னை கணக்கெடுக்கவில்லை சம்மந்தம் இல்லாதொருவருக்கு பயிற்றுவிப்பாளர் விருது கொடுத்து கௌரவப்படுத்தினார்கள்

ஏன் எங்களை கௌரவப்படுத்த வில்லை மன்னார் மண்ணிலே எங்களை கண்டு கொள்வதில்லை எனும் போது பிறமாவட்டங்களில் எவ்வாறு கண்டு கொள்வார்கள் மிகவும்கவலையடைந்தேன் நான் மட்டுமல்ல  மன்னார் மாவட்டவிளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரினதும் கேள்வி இதுதான்.

மன்னார் மண்ணின் கலைஞர்களை அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நியூமன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து?

மகிழ்ச்சியானதும் பாராட்டுக்குரியதுமான விடையமாகும். ஏன் என்றால் என்னைப்போன்ற விளையாட்டு வீரர்களையும் வீட்டிற்கு வந்து செவ்வி கண்டு வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் பாரிய சேவையினை இதுவரை யாரும் செய்யாத நீண்ட காலம் யாரும் சிந்திக்காத விடையத்தினை சிந்தித்து செயல்படுத்தி வரும் நியூமன்னார் நிர்வாகத்திற்கும் வை.கஜேந்திரனாகிய உங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்கிறேன். மன்னார் மாவட்டத்தின் முன்னிலைப்படுத்தி மன்னார் தொடர்பான பல விடையங்களை உடனுக்குடன் தொரியப்படுத்தும் அதேவேளை ஒரு தலைப்பட்சமாக செயற்படாமல் அறிந்து ஆராய்ந்து மன்னார் மாவட்டத்தினை முழுமையாக வெளிக்கொணரவேண்டும் என வேண்டியவனாக வாழ்த்தி நிற்கிறேன்

 மன்னார் இணையத்திற்காக...
வை-கஜேந்திரன்





















மன்னார் இணையத்தின் விம்பம் ஊடாக தேசிய உதைபந்தாட்ட பயிற்சியாளரும் சிறந்தபயிற்றுவிப்பாளருக்கான ஆளுநர் விருது பெற்ற ஜனாப் ரெட்ணம் முகம்மது ஜஸ்மின் அவர்களின் அகத்தில் இருந்து.. Reviewed by NEWMANNAR on March 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.