அண்மைய செய்திகள்

recent
-

பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா? - உறுதிப்படுத்த மறுக்கிறது இராணுவம்

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்த பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக  இராணுவப் பேச்சாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்த பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக இராணுவப் பேச்சாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

 
பொட்டு அம்மான் தமிழ் நாட்டில் குருவி என்ற புனைப்பெயரில் வாழ்ந்து வருவதாக சிங்களப் பத்திரிகையான திவயின இன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் ஜயநாத் ஜயவீர கருத்து வெளியிடுகையில், இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் உயிரிழந்திருந்தனர். அவர்களில் பலர் அடையாளம் காணப்பட்டனர். எனினும் பொட்டு அம்மானின் சடலம் அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில் பொட்டு அம்மான் தமது மனைவி, பிள்ளைகளுடன் தமிழ் நாட்டிற்குச் சென்று குருவி என்ற பெயருடன் வாழ்ந்து வருவதாக ஊடகங்கள் மூலமாக அறியமுடிகின்றது. எனினும் அவர் உயிருடன் இருக்கின்றாரா, இல்லையா என்ற விடயமும், அவ்வாறு உயிருடன் இருந்தால் தமிழ் நாட்டிற்குச் சென்று வாழ்கின்றாரா என்பதும் உறுதிப்படுத்த முடியாதிருப்பதால் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.

பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா? - உறுதிப்படுத்த மறுக்கிறது இராணுவம் Reviewed by NEWMANNAR on March 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.