சாரதி கைது! தனியார் பேருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பு!
தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதிகள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த இ.போ.ச பஸ் மற்றும், தனியார் பஸ் சாரதிகளுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து தனியார் பஸ் சாரதி இ.போச. பஸ் சாரதியை தாக்கியமையால் அவர் காயங்களுக்குள்ளானார். இதனால் தனியார் பேருந்து சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.
தனியார் பேருந்து சாரதியை விடுவிக்கும் வரை தமது போராட்டத்தை முன்னெடுப்போம். தனியார் பேருந்து.- இ.போச. பஸ் பிரச்சினைகள் நீண்டு கொண்டே செல்கின்றது. இதற்கு எந்தவித தீர்வும் இதுவரை எட்டப்படவுமில்லை. இதனால் பேருந்து சாரதிகளுக்கிடையே அடிக்கடி பிரச்சினைகள் தோன்றுகின்றது. இதன் விளைவை நாம் மட்டுமல்ல பொதுமக்கள் கூட எதிர்நோக்க நேரிடுகின்றது.
ஆகவே இந்தப் பிரச்சினைக்கு உடடினயாக தீர்வு எட்டப்பட வேண்டும் என தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதிகள் இதன்போது தெரிவித்தனர்
நேற்றைய தினம் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த இ.போ.ச பஸ் மற்றும், தனியார் பஸ் சாரதிகளுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து தனியார் பஸ் சாரதி இ.போச. பஸ் சாரதியை தாக்கியமையால் அவர் காயங்களுக்குள்ளானார். இதனால் தனியார் பேருந்து சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.

ஆகவே இந்தப் பிரச்சினைக்கு உடடினயாக தீர்வு எட்டப்பட வேண்டும் என தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதிகள் இதன்போது தெரிவித்தனர்
சாரதி கைது! தனியார் பேருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பு!
Reviewed by Admin
on
March 30, 2016
Rating:

No comments:
Post a Comment