அண்மைய செய்திகள்

recent
-

வட இலங்கை மீனவர் பிரச்னை குறித்து ஆளுனருடன் சந்திப்பு

வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, வட இலங்கை மீனவர் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து மீனவர் பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு பிரச்சினைகள் குறித்து ஆளுனருக்கு எடுத்துரைத்திருக்கின்றனர்.
எல்லை மீறி வந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களின் பிரச்சினை மட்டுமல்லாமல் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளும் வடபகுதி மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
வெளிமாவட்ட மீனவர்களின் வருகையினால் சொந்த மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் சுதந்திரமாகத் தொழில் செய்ய முடியாதிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த ஆளுனர் ரெஜினோல்ட் குரே, கூடிய விரைவில் மீனவர் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் உறுதியளித்தார்.
“சட்டவிரோத தொழில் முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் பிரச்சினை வடபகுதியில் மட்டுமல்லாமல், நாட்டின் தென்பகுதியிலும் காணப்படுகின்றது. அதைத் தடுக்க தேவையான சட்டவிதிகளையும் பொறிமுறைகளையும் உருவாக்க வேண்டியிருக்கிறது. அதற்காக கடற்படையினருக்கும், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கும் நவீன உபகரணங்கள் என்பவற்றை வழங்க வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்கின்றது. இந்தியாவுடன் இலங்கைக்கு இப்போது நல்ல உறவு நிலவுகிறது. இதனைப் பயன்படுத்தி இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்” என்றார் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே.
வட இலங்கை மீனவர் பிரச்னை குறித்து ஆளுனருடன் சந்திப்பு Reviewed by NEWMANNAR on March 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.