அண்மைய செய்திகள்

recent
-

மிகவும் சிறப்பாக இடம்பெற்ற துரையம்மா அன்பகத்தின் 09வது ஆண்டு தெடக்க விழா....முழுமையான படங்கள் இணைப்பு….

மன்னார் மாவட்டத்தில் தனது கல்விச்வேவையினை தொண்டாக செய்து வரும் துரையம்மா அன்பகமானது தனது 09வது ஆண்டில் காலடி பதிக்கின்றது.

துரையம்மா அன்பகமானது தனது 09வது ஆண்டு ஆரம்பத்தினை முன்னிட்டு 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5-30 மணியளவில் 137|3C புதிய மூர்வீதியில் உள்ள அன்பகத்தில் “தியாக சிந்தையும் சிறந்த சேவையும்-நல்மனம் படைத்தோரையும் பாராட்டிக்கௌரவிக்கும் நிகழ்வும் (துரையம்மா அன்பகம்.ORG)புதிய இணையத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
விருந்தினர்களை வரவேற்றலுடன் மங்கல விளக்கேற்றும் நிகழ்வுடன் அன்பகத்தின் கொடியினை துரையம்மா அன்பகத்தின் தலைவர் ஏற்றிவைக்க கீதம் இசைக்கப்பட்டது.

புதிய அலுவலகத்தினை பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட திரு.மாணிக்கவாசகர் ஸ்ரீஸ்கந்தகுமார் பிரதேச செயலாளர் மாந்தை மேற்கு அவர்களின் கரங்களினால் சிறந்து வைக்க புதிய துரையம்மா ஆன்பகம்.ORG இணையம் த.ஷத்விதன் மென்பொறியியலாளர் அவர்களின் கரங்களினால் திறந்து வைக்க வரவேற்பு நடனத்தினை வே.ஜான்சி வழங்க வரவேற்புரையினை திருமதி.றொவீனா பொன்ராசா வழங்கினார்.

தலைமையுரையினை அமைப்பின் தலைவர் மனுவேற்பிள்ளை உதயன் வழங்கினார் துரையம்மா அன்பகத்தின் செயற்பாடுகள் சேவைகள் தேவைகள் விளக்கப்பட்டது. விருந்தினர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு……

பிரதமவிருந்தினராக-திரு.மாணிக்கவாசகர் ஸ்ரீஸ்கந்தகுமார் பிரதேச செயலாளர் மாந்தை மேற்கு
சிறப்பு விருந்தினர்களாக…..
திருமதி.சுகந்தி செபஸ்ரியன் வலயக்கல்விப்பணிப்பாளர் மன்னார்
செல்வி.S.கார்த்தியாயினி கல்வி அதிகாரி யுனிசெப்-கிளிநொச்சி
திரு.T.மரியதாஸ் செயலாளர் துயர்துடைப்பு மறுவாழ்வுச்சங்கம் மன்னார்.

கௌரவ விருந்தினர்களாக….
திரு.S.லோகநாதன் வைத்திய கலாநிதி மன்னார்
திரு.S.C.M.குருஸ் ஓய்வு பெற்ற கூட்டுறவு அலுவலகர் பேசாலை மன்னார்.
திரு.S.ராஜகோபால் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் மன்னார்.
திரு.N.சுந்தரேசன் ஆசிரியர் யாழ்ப்பாணம்.
திரு.ஜேக்கப் அன்ரனி உதவிக்கணக்காய்வாளர் பள்ளிமுனை மன்னார்.
இயக்குநர் நியூ மன்னார் இணையம் மன்னார்.
திரு.வை.கஜேந்திரன் ஊடகவியலாளர் நியூ மன்னார் இணையம்-இளங்கவிஞர்-மன்னார்.
திருமதி.சீமான் மரகதம் சமூகசேவகி பள்ளிமுனை மன்னார்
சின்கிளேயர் பீற்றர் அரச அரசசார்பற்ற ஸ்தாபனங்களின் ஆலோசகரும் ஆய்வாலரும் மன்னார்.

“தியாக சிந்தையும் சிறந்த சேவையும்-நல்மனம் படைத்தோரையும் எனும் தொனிப்பொருளில் பாராட்டிக்கௌரவிக்கப்பட்டவர்கள்……
திரு.மாணிக்கவாசகர் ஸ்ரீஸ்கந்தகுமார் பிரதேச செயலாளர் மாந்தை மேற்கு.
திரு.ளு.லோகநாதன் வைத்திய கலாநிதி மன்னார்
திரு.ளு.ஊ.ஆ.குருஸ் ஓய்வு பெற்ற கூட்டுறவு அலுவலகர் பேசாலை மன்னார்
திரு.ளு.ராஜகோபால் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் மன்னார்
திரு.N.சுந்தரேசன் ஆசிரியர் யாழ்ப்பாணம்
திரு.ஜேக்கப் அன்ரனி உதவிக்கணக்காய்வாளர் பள்ளிமுனை மன்னார்
திரு.மு.விஜிதன் இயக்குநர் நியூ மன்னார் இணையம் மன்னார்
திரு.வை.கஜேந்திரன் ஊடகவியலாளர் நியூ மன்னார் இணையம்-இளங்கவிஞர் மன்னார்.

இவ்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய விருந்தினர்கள் தங்களின் உரையில்......
இவ்வாறானதொரு கல்விச்சேவையானது காலத்தின் கட்டாயம் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பங்காற்றி நிற்கின்றது.
மன்னார் மண்ணில் பல அமைப்புகள் இயங்கி வருகின்றது. பல சேவைகளை ஆற்றுகின்றனர் ஆனாலும் துரையம்மா அன்பகமானது தனது 40 உறுப்பினர்களின் மாதாந்தக்கொடுப்பனவின் மூலமும் நல்ல மனம் படைத்த மன்னார் மண்ணின் மைந்தர்கள் உதவியாலும் தொடர்ச்சியாக 08 ஆண்டுகளை நிறைவு செய்து 09வது ஆண்டில் காலடிபதிக்கின்றது மகிழ்ச்சியான விடையமே தொடரட்டும் சேவை.....

ஒட்டுமொத்த மாணவர்களின் தற்போதைய தேவை கல்விதான் கல்வியால் தான் எதையும் சாதிக்க முடியும் அந்தக்கல்வியை எந்தவித இடையூறுகள் இல்லாமல் தொடர்ச்சியாக கல்வியைப்பேணுவதற்கு தனது முழுப்பங்களிப்பினையும் தொடர்ச்சியாக செய்து வரும் துரையம்மா அன்பகத்தாரின் சேவை உண்மையிலே பாராட்டப்படவேண்டியதும் அவர்களுக்கான வசதிகளை ஆலோசனைகளை வழங்குவதோடு என்றும் பக்கபலமாக இருப்போம் என ஒருமித்த குரலில் கூறியது மிகவும் கரவொலியை ஏற்படுத்தியது. கல்விக்கு சேவை செய்யும் அமைப்புகளுகக்கு கிடைக்கும் கௌரவம் ஆகும்….

ஞாயிற்க்கிழமையில் அதுவும் விடுமுறை நாளில் இவ்வாறான விழாக்களுக்கு மாலை 5-30 கலந்து கொண்டதை காணும் போது கல்விக்கான சேவை செய்கின்ற துரையம்மா அன்பகம் அமைப்பபை கௌரவப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மன்னார் மண்ணில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அதிகாரிகளுக்கு இருக்கின்ற பொறுப்புணர்வையும் அக்கறையினையும் காட்டிநிற்கின்றது.

 துரையம்மா அன்பகத்தின் கல்விச்சேவையினை பாராட்டியதுடன் அதன் உறுப்பினர்களின் தியாக சிந்தைக்கும் வாழ்த்துக்கள் கூறியதோடு இரவுணவுடன் துரையம்மா அன்பகத்தின் 09வது ஆண்டு தெடக்க விழா இனிதே நிறைவுற்றது.























































































 












மிகவும் சிறப்பாக இடம்பெற்ற துரையம்மா அன்பகத்தின் 09வது ஆண்டு தெடக்க விழா....முழுமையான படங்கள் இணைப்பு…. Reviewed by Author on April 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.