சிறுநீரக சிகிச்சை நிலையங்கள் திறப்பதற்கு உத்தேசம்!
சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக சிகிச்சை நிலையங்கள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் 6 சிறுநீரக சிகிச்சை நிலையங்கள் மே மாதம் திறக்கப்படவுள்ளன.
தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் குறித்த சிகிச்சை நிலையங்கள் மே மாதம் அளவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெலிஓயா, அரலங்கங்வில, பதவியா உள்ளிட்ட இடங்களிலேயே குறித்த சிகிச்சை நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொலனறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுநீரக வைத்தியசாலை குறித்து ஆராய்வதற்கு சீன அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், இதன் அறிக்கை கிடைத்த பிறகு அங்கு வைத்தியசாலை நிர்மாணிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் அம்பாந்தோட்டை, அநுராதபுரம், திருகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் உள்ள சிறுநீரக வைத்தியசாலைகளை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், பொரளையில் அமைந்துள்ள சிறுநீரக பரிசோதனை நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக சிகிச்சை நிலையங்கள் திறப்பதற்கு உத்தேசம்!
Reviewed by Author
on
April 25, 2016
Rating:

No comments:
Post a Comment