அண்மைய செய்திகள்

recent
-

முதல் பெண் பிரதமரின் 100ஆவது பிறந்த தின நிகழ்வு ....படங்கள் இணைப்பு


உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 100ஆவது பிறந்த தினம் எதிர்வரும் 17ஆம் திகதி ஆகும். ஆகவே, இதனை முன்னிட்டு இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விசேட நிகழ்வொன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக் கொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வினை நுாற்றாண்டு பிறந்த தின ஏற்பாட்டு குழு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்வில் உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமாவோ பண்டார நாயக்க தொடர்பிலான நுால் வெளியீட்டு விழாவும் இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.












முதல் பெண் பிரதமரின் 100ஆவது பிறந்த தின நிகழ்வு ....படங்கள் இணைப்பு Reviewed by Author on April 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.