பனாமா பேப்பர்ஸ் கசிவு: பதவியை துறந்தார் ஐஸ்லாந்து பிரதமர்
வெளிநாட்டில் முறைகேடாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக ஐஸ்லாந்தின் பிரதமர் சிக்மண்டூர் டேவிட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் (International Consortium of Investigative Journalism) பனாமா பேப்பர்ஸ்' என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக 11.5 மில்லியன் தகவல் தரவுகளைத் திரட்டியுள்ளது.
இந்த பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பார்சிலோனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இடம்பெற்றிருக்கின்றனர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் புலனாய்வில் 140 அரசியல் புள்ளிகளின் வரி ஏய்ப்பு, பண பதுக்கல் அம்பலமாக்கியிருக்கிறது.
இதில், ஐஸ்லாந்து பிரதமர் சிக்மண்டூர் டேவிட் நேரடி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. பொதுமக்களும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
எனினும் பதவி விலக முடியாது என சிக்மண்டூர் கூறிவந்தார். போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரவே தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து வேளாண்மை அமைச்சரான சிக்குர்டூர் இன்கி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பனாமா பேப்பர்ஸ் கசிவு: பதவியை துறந்தார் ஐஸ்லாந்து பிரதமர்
Reviewed by Author
on
April 07, 2016
Rating:

No comments:
Post a Comment