14 தியாக்கோன்கள் இன்று புதிய குருக்களாக திருநிலை ...
கொழும்பு உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 14 தியாக்கோன்கள் இன்று காலை கொழும்பு, கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகையினால் புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்படவுள்ளனர்.
நீர்கொழும்பைச் சேர்ந்த கிஹான் பிரியசாந்த பீரிஸ், மோதரயைச் சேர்ந்த றெக்ஸ் வின்சன்ட் ஜெயசீலன், நீர்கொழும்பைச் சேர்ந்த ஜெரால்ட் கிறிஸ்டி வோள்ட்ப் பெரேரா, பமுனுகமவைச் சேர்ந்த நிக்லஸ் பிரசங்க ரொட்றிகோ, போப்பிட்டியைச் சேர்ந்த சமித் குமார பெரேரா, தெய்யகாத்தவைச் சேர்ந்த ருவன் தாரக்க அல்விஸ், வெயாங்கொடவைச் சேர்ந்த ஷெமன் விக்கிரமசிங்க, ராகமவைச் சேர்ந்த நொயெல் ஷானக்க தில்ஹார மென்டிஸ், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பேர்னாட் பிரபாத் இன்பராஜன், நிட்டம்புவைச் சேர்ந்த நுவான் சத்துரங்க பெரேரா, குருணாகலைச் சேர்ந்த பிலிஷியன் நிசல் மதூஷன, களஎலியைச் சேர்ந்த ஹர்ஷ தினேத் ராஜகருணா, வெலிகம்பிட்டியைச் சேர்ந்த ரசிக்க திலுஷான் பெரேரா, ஏத்துக்காலவைச் சேர்ந்த சஷிக்க மனோஜ் ரொட்றிகோ ஆகிய 14 தியாக்கோன்கள் இன்று காலை கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப் பிடத்தக்கது.
14 தியாக்கோன்கள் இன்று புதிய குருக்களாக திருநிலை ...
Reviewed by Author
on
April 09, 2016
Rating:
Reviewed by Author
on
April 09, 2016
Rating:


No comments:
Post a Comment