பாரிஸ் உடன்பாட்டில் இலங்கை உள்ளிட்ட 175 நாடுகள் கையெழுத்து!
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பிலான புதிய உடன்பாடு ஒன்றில் இலங்கை உள்ளிட்ட 175 நாடுகள் நேற்று கையெழுத்திட்டன.
நியூ யார்க்கிலுள்ள ஐ நா தலைமையகத்தில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தமது நாடுகளின் சார்பில் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
இலங்கை சார்பில் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.
இந்த மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
அமெரிக்காவின் சார்பில், இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, பேரக் குழந்தையை மடியில் அமரவைத்தபடி, இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.
இந்த உடன்படிக்கை அமலுக்கு வர உலகளவில் புவி வெப்பமடைய 55 சதவீதம் காரணமாக இருக்கும் 55 நாடுகளின் நாடாளுமன்றங்களின் முழு அனுமதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் உடன்பாட்டில் இலங்கை உள்ளிட்ட 175 நாடுகள் கையெழுத்து!
Reviewed by Author
on
April 23, 2016
Rating:

No comments:
Post a Comment