அண்மைய செய்திகள்

recent
-

புகை­யி­ர­தத்தால் மோதுண்டு உயி­ரி­ழந்த 19 வயது யுவதி ; செல்பியால் வீபரீதம்...


தண்­ட­வா­ளத்­திற்கு மிகவும் அருகில் நின்­ற­வாறு செல்பி (சுய புகைப்­படம்) எடுத்த 19 வயது யுவ­தி­யொ­ருவர், ஓடும் புகை­யி­ர­தத்தால் மோதுண்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த 9 ஆம் திகதி சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த விப­ரீத சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

தென் சீனாவில் பொஷான் என்னும் இடத்தில் அந்த யுவதி மீது புகை­யி­ரதம் மோதும் அதிர்ச்­சி­யூட்டும் புகைப்­ப­டங்கள் அந்தப் பிராந்­தி­யத்­துக்கு சுற்­றுலா சென்ற சுற்­றுலா பய­ணி­களால் எடுக்­கப்­பட்டு வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

மேற்­படி புகை­யி­ரதப் பாதை­யா­னது லியன்தாங் கிரா­மத்­தி­லுள்ள 33 ஏக்கர் பரப்­ப­ள­வான ரோஜாப் பூந்­தோட்­டங்­க­ளி­னூ­டாக செல்­கி­றது. அந்தப் பூந்­தோட்­டங்­களைப் பார்­வை­யிட பெருந்­தொ­கை­யான சுற்­றுலா பய­ணிகள் அங்கு விஜயம் செய்­வது வழ­மை­யா­க­வுள்­ளது.

இந்த விப­ரீத நிகழ்வு குறித்து மேற்­படி பூங்­காக்­களின் முகா­மை­யா­ள­ரான டாய் தெரி­விக்­கையில், குறிப்­பிட்ட யுவதி சம்­பவ தினம் சக மாண­விகள் இருவர் சகிதம் பூங்­கா­விற்கு விஜயம் செய்து தண்­ட­வா­ளத்­திற்கு மிகவும் அருகில் நின்­ற­வாறு கடந்து செல்லும் புகை­யி­ர­தத்தை பின்­னணிக் காட்­சி­யாக கொண்டு செல்பி புகைப்­படம் எடுக்கும் செயற்­பாட்டில் ஈடு­பட்­ட­தாக கூறினார்.

இதன்­போது அந்த புகை­யி­ரதம் அவர் மீது மோதி­யதால் அவர் புகை­யி­ர­தத்தின் அடியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் பிராந்திய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

புகை­யி­ர­தத்தால் மோதுண்டு உயி­ரி­ழந்த 19 வயது யுவதி ; செல்பியால் வீபரீதம்... Reviewed by Author on April 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.