ஜப்பானை உலுக்கிய இரு பூமியதிர்ச்சிகள் : 29 பேர் பலி, பலர் காயம், வீடுகளுக்கு சேதம் ....
தென் ஜப்பானை வியாழக்கிழமை நள்ளிரவு கடந்த நிலையில் தாக்கிய அதி சக்திவாய்ந்த 6.4 ரிச்டர் பூமியதிர்ச்சியிலும் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற 7.3 ரிச்டர் பூமியதிர்ச்சியிலும் சிக்கி குறைந்தது 29 பேர் பலியானதுடன் 1000 ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந் தப் பூமியதிர்ச்சிகளால் கட்டடங்கள் பலவும் இடிந்து விழுந்ததுடன் மின்சார இணைப்புகளும் சேதத்துக்குள்ளாகியுள்ளன.
இந்நிலையில் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளின் கீழ் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த பூமியதிர்ச்சிகளால் பல வீடுகள் இடிந்து விழுந்ததுடன் இரு தீ அனர்த்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
ஜப்பானை உலுக்கிய இரு பூமியதிர்ச்சிகள் : 29 பேர் பலி, பலர் காயம், வீடுகளுக்கு சேதம் ....
Reviewed by Author
on
April 16, 2016
Rating:
Reviewed by Author
on
April 16, 2016
Rating:


No comments:
Post a Comment