Wi-Fi வேகத்தை இரு மடங்கு அதிகரிக்கூடிய தொழிநுட்பம் கண்டுபிடிப்பு....
Wi-Fi வேகத்தை இரு மடங்கு அதிகரிக்க கூடிய புதிய வழிமுறையை இந்திய வம்சாளி பொறியாளர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியியல் மாணவரான ஹரிஷ் கிருஷ்னசுவாமி, நான்-ரெசிப்ரோக்கல் சர்குலேட்டர் மற்றும் ஃபுல்- டூப்லெக்ஸ் ரேடியோவினை (non-reciprocalcirculator and a full-duplex radio) நானோஸ்கேல் சிலிகான் (nanoscalesilicon chip) சிப் ஒன்றில் பொருத்தி இந்த அமைப்பினை உருவாக்கியுள்ளார்.
இந்த புதிய தொழில்நுட்பம் தொலைதொடர்பு துறையில் புரட்சியை உண்டாக்கும் என்றும் சிலிகான் சிப் பொருத்தப்பட்ட முதல் சர்குலேட்டர் இது தான் எனவும் என கொலம்பியா ஹை-ஸ்பீடு மற்றும் எம்எம்-வேவ் ஐசி லேப் (Columbia High-Speedand Mm-wave IC (CoSMIC) Lab) தலைவர் கிருஷ்னசுவாமி தெரிவித்துள்ளார்.
மேலும், ஃபுல்-டூப்லெக்ஸ் கம்யூனிகேஷன் (Full-duplex communication) முறையில் நானோ சிலிகான் சிப் மற்றும் ஒற்றை ஆன்டெனா பயன்படுத்தி Wi-Fi வேகத்தை இரு மடங்கு அதிகரிக்க முடியும் என்பதை சாத்தியமாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இது மக்கள் பயன்பாட்டிற்கு வழங்குவது குறித்த எவ்வித தகவல்களும் தற்போது வெளியிடப்படவில்லை.
Wi-Fi வேகத்தை இரு மடங்கு அதிகரிக்கூடிய தொழிநுட்பம் கண்டுபிடிப்பு....
Reviewed by Author
on
April 16, 2016
Rating:
Reviewed by Author
on
April 16, 2016
Rating:


No comments:
Post a Comment